குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்!

போன வாரம் இந்த படம் பார்த்ததுக்கு இன்னிக்கு வரைக்கும் நான் ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கேன். காரணம், என் பெண் தோழியை (கேர்ள் ஃப்ரெண்ட்னா கெட்ட வார்த்தையாமே?) அழைத்துக் கொண்டு சத்யம் தியேட்டர்க்கு போனேன். போகும் போது ஒண்ணா போனோம். வரும்போது தனித்தனியா வந்துவிட்டோம். என்னை செருப்பால் அடிக்காத குறை. ஏழாவது ப்ரோப்பஸல் அட்டெம்ப்ட் ஃபெயில்ட்.

சரண், ஏமாற்றிவிட்டார். யுவன் மியூசிக்கை வீணடித்துவிட்டார்கள். படம் பார்த்த எஃபெக்ட்டை உயிர்த்தோழனுடன் சேர்ந்து மேன்ஷன் ஹவுஸில் செலிபிரேட் பண்ணினேன். "நண்பன் தான் எப்பவுமே.. நண்பன் தான் உயிர், மத்ததெல்லாம்......" இத நான் சொல்லலீங்க.. படத்துல வர்ற டையலாக்.
என்னமோ தெரியலை. நான் வரிசையா பாத்துட்டு வர்ற படம் எல்லாமே அசுரத்தனமான மொக்கையா இருக்கு. இதற்கு முன் பார்த்த படம், கார்த்திக் அனிதா.

எக்ஸ்ட்ரா பிட்ஸ்: ஆஃபிஸில் நான் உட்கார்ந்து வேலை பார்க்கும் சீட்டுக்கு கீழே தீ எரிந்து கொண்டிருப்பதால், பிளாக் பக்கம் தலை காட்ட முடிவதில்லை. எதுவுமே நிரந்தரமில்லை. மீண்டு(ம்) வருவேன்.

***************

9 comments:

கிரி said...

//நான் வரிசையா பாத்துட்டு வர்ற படம் எல்லாமே அசுரத்தனமான மொக்கையா இருக்கு.//

தேடி பிடித்து போறீங்க போல

ஷண்முகப்ரியன் said...

//நான் வரிசையா பாத்துட்டு வர்ற படம் எல்லாமே அசுரத்தனமான மொக்கையா இருக்கு.//

அப்போ கொஞ்ச நாள் தமிழ்ப் படம் பார்க்கப் போகாதீங்களேன் ப்ளீஸ்.உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன் ,கணேஷ்!

SUREஷ் said...

//காரணம், என் பெண் தோழியை (கேர்ள் ஃப்ரெண்ட்னா கெட்ட வார்த்தையாமே?)//


யார் சொன்னது காட்டுங்க என்னிடம்..

பின்னி பெடல் எடுக்க வேண்டும்..

SUREஷ் said...

//"நண்பன் தான் எப்பவுமே.. நண்பன் தான் உயிர், மத்ததெல்லாம்......" //


ஐயோ இப்பவே படம் பார்க்கவேண்டும் போல் உள்ளதே...

ஸ்ரீமதி said...

:))))

Benedict Alphonse said...

enna annan.. padathaa mokkana sollitu neeingaa mokka podrikkaaa.. itcee..

வலையேறி மூக்கன் said...

ஐயோ பாவம்...உங்கள் எட்டாவது முயற்சியாவது வெற்றி பெற வாழ்த்துக்கள்..

இருந்தாலும் நீங்க இந்தப் படத்துக்கு கூட்டிப் போயிருக்க வேணாம். :))

வண்ணத்துபூச்சியார் said...

ரிஸ்க் எடுக்கறது உங்களுக்கு ரஸ்க் சாப்பிடறது போல இருக்கே..

ரெம்ப தைரியம் தான்.

டக்ளஸ்....... said...

அண்ணனுக்கு ஒரு குருவி, ஒரு வில்லு DVD பார்சல்ல்ல்ல்ல்...!

Related Posts with Thumbnails