கல்யாணம் ஆகப் போகும் குமரிகளின் கூத்து குத்துகள்!

1) அரைலிட்டர் எண்ணெயை தலையிலும், முகத்திலும் ஊற்றிக் கொண்டு மொக்கையாக சுற்றிக் கொண்டு பெண்களை, ரொம்ப ஈஸியாகக் கண்டுபிடிக்கலாம். எப்போதும் கடலை மாவு, சோயாஸ் மாவு என எதையாவது அப்பிக் கொண்டு அதை லைட்டாக கழுவி விட்டு, 'யூ நோ, நேத்து நான் ஃபேஸியல் பண்ணேன்' என திரிவார்கள்.

2) 'ச்சே, அவர்கிட்ட இருந்து ஃபோன் வரவே மாட்டேங்குது, என்னை அவர் மறந்துட்டார்ன்னு நினைக்கிறேன், ஏன் தான் இவர் இப்படி இருக்காரோ' என்று தன்னந்தனியே புலம்பிக் கொண்டு திரிபவர்களை, 'என்ன ஆச்சுமா, யாரு?' என்று கேட்டு விட்டால் போதும், 'அவர் தான் என் வீட்டுக்காரர்' என்று தவுசண்ட் வாலா பட்டாசைக் கொளுத்திப் போட்டு வெட்கத்தில் பயமுறுத்துவார்கள். வேப்பிலை அடித்தால்தான் தெளியும்.

3) தினமும் தலையில் மல்லிகைப் பூ, ஒரு நாளைக்கு மூணுவாட்டி சோப் போட்டு முகம் கழுவிக் கொண்டு ஃப்ரெஷ்ஷாக இருப்பார்கள். 'ஏன்மா, என்ன ஆச்சி'ன்னு கேட்டுட்டா போதும், 'அவர் திடீர்ன்னு சர்ப்ரைஸ்ஸா என்னை பாக்க வந்தார்ன்னா, உன்னை மாதிரியா எண்ணெய் வடிஞ்சி இருக்கிறது?' என்று பல்பு கொடுத்து திமிராக கனவில் மிதப்பார்கள்.

4) அதுவரைக்கும் மேனிக்யூர், மேடிக்யூர் பத்தி என்னன்னே தெரியாது "அது ஏதாவது சைட் டிஷ்ஷா?" என்ற ரேஞ்ச்சில் திரிபவர்கள், வாரம் வாரம் மெஹந்தி, மருதாணி என எதையாவது கை கால்களில் அப்பி சிவப்பிந்திய பெண்களின் மிச்ச் சொச்சமாக திரிவார்கள்.

5) கைகளில் நகம் வளர்க்கும் பழக்கமே இருக்காது, கொஞ்சம் எட்டி பார்த்தாலும் கடித்து கரும்பி மொட்டையாக வைத்து இருப்பார்கள். அப்படி இருக்கும் நகங்களை எல்லாம் உரம் போட்டு வளர்த்து தினமும் ஒரு நெயில் பாலிஷ் போட்டு அலப்பரையை கூட்டுவார்கள்.

6) லஞ்ச்சில் பக்கத்தில் உட்கார்ந்து ஒரு அன்லிமிட்டட் மீல்ஸை தலைகீழாக கவிழ்ப்பவர்கள், "யூ நோ, ஐயாம் இன் டயட்" என ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் பண்ணி, அவர்கள் போடும் 140mm சீன் தாங்காது. அவ‌ர்க‌ளே பசி தாங்க‌ முடியாம‌ல், 4, 5 ம‌ணிக்கு கேன்டீனுக்கு கமுக்கமாக ப‌டை எடுத்து எக் சாண்ட்விச்சை உள்ளே த‌ள்ளுவார்கள். பின்னே ப‌ழ‌கின‌ வ‌யிறு தாங்குமா? அது என்ன எவ்வளவு ஃபேஸியல் பண்ணாலும் தாங்குற முகமா, இல்லை எத்தனை வாட்டி மெஹந்தி போட்டாலும் தாங்குற கையா?


7) காலேஜ் ஃபைனல் இயரில் எடுத்த‌ நைந்து போன சுரிதாரை எல்லாம், வீட்டு பரணில் தூக்கிப் போட்டுவிட்டு, புதுசு புதுசாக பத்து செட் சுரிதார் எடுத்து இருப்பார்கள். அந்த கொடுமை எல்லாத்தையும் விட ஒவ்வொரு ட்ரெஸ்ஸுக்கும் மேட்சிங்காக இயர், நெக் ஃபிட்டிங்க்ஸ், இமிடேஷன்ஸ், பேங்கில்ஸ், ஹேர் க்ளிப்ஸ், பேர்ல்ஸ் என்று பின்னி பெடல் எடுப்பார்கள். அடிஷ‌ன‌ல் பி.கு: இதெல்லாம் புது சுரிதாரை விட‌ காஸ்ட்லியாக‌ இருக்கும் :(

8) இந்த எல்லா காமெடிக‌ளையும் விட‌ அல்டிமேட் ஒண்ணு இருக்கு. டிவியில் ஏதாவது ஒரு பாட்டு ஓடும்போது, "திரும‌ண‌ ம‌ல‌ர்க‌ள் த‌ருவாயா" ஜோதிகா போல‌ ஒரு மாதிரியான‌ க‌ன‌வுல‌க‌த்தில் இருப்பார்க‌ள், சாப்பிட‌ பிடிக்காது, எப்போது ஃபோன் வ‌ரும் என‌ செல்போனின் டிஸ்ப்ளேயை ஆன்ல‌யே வைத்து இருப்பார்க‌ள். கறுப்பாக இருக்கும் பெண்கள் கூட லிப்ஸ்டிக்கை பூசிக் கொண்டு, ஐ ப்ரோவ் ஷேட் பண்ணிக் கொண்டு திரியும் அலம்பல்கள், "ரீல் அந்து போச்சிடா சாமியோவ்" என ஒரே உல்டாவாக கால் தரையில் படாமல் திரிவார்கள்.

இதெல்லாம் கேர்ள்ஸ் திங்க், உன‌க்கு என்னடா பிர‌ச்சினை என்று ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் நினைக்க‌லாம், திட்ட‌லாம். அவர்கள் எல்லாம் ஒரு வயசு பையனின் பாய்ண்ட் ஆஃப் வியூவில் இருந்து பார்க்க வேண்டும். எந்நேர‌மும் பார்த்துக் கொண்டிருக்கு‌ம் மொக்கை ஃபிக‌ர்க‌ள், இதெல்லாம் தேறாது என‌ ரிஜக்ட்ட‌ட் லேடீஸ் லிஸ்டில் ஒதுக்கி வைத்த‌வ‌ர்க‌ள், ஒன் ஃபைன் டே இப்ப‌டி அப்ப‌டி என ஃப்ரெஷ்ஷாக‌ வ‌ந்து திரியும் போது ஒருவ‌னின் ம‌ன‌ம் என்ன‌ பாடுப‌டும்? ச்சே ஒரு வொன்ட‌ர்ஃபுல் ஃபிக‌ரை மிஸ் ப‌ண்ணிட்டோமேன்னு அவ‌ளுக்கு க‌ல்யாண‌ம் ஆகிற‌ வ‌ரைக்கும் கில்ட்டியா ஃபீல் ப‌ண்ணுவான். அந்த‌ ஃபீலிங்க்ஸின் உள‌ற‌ல்க‌ளே மேலே பார்த்த‌வை.

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

எங்கிருந்தாலும் வாழ்க‌!

******************************

17 comments:

நையாண்டி நைனா said...

சூப்பரப்பு...

Vels said...

மொக்க பிகர் கூட மேக் - அப் போட்டா ஆளையே கவுக்கற மாதிரி இருக்கும்.
இதுக்கெல்லாம் பீல் பண்ணலாமா ?

Anonymous said...

//எங்கிருந்தாலும் வாழ்க‌!//
ஆனாலும் உங்க நிலைமை கடைசீல எங்கிருந்தாலும் வாழ்க பாடும் நிலைமையா ஆகணும் :)

மங்களூர் சிவா said...

haa haa
:)))))))))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சின்ன அம்மிணியின் கமெண்ட்டுக்கு ரிப்பீட்டு போட்டுக்குறேன்..

ஆனாலும் சோகத்தைக் கடிச்சுக்கிட்டு எழுதிருக்கிற ஸ்டைல் எனக்குப் புடிச்சிருக்கு..

முதல் ஓட்டு நான்தான் குத்தினேன்..

பெஸ்ட் ஆஃப் லக்..

Anonymous said...

thaliva thool

அமுதா கிருஷ்ணா said...

அந்த கொடுமை எல்லாத்தையும் விட ஒவ்வொரு ட்ரெஸ்ஸுக்கும் மேட்சிங்காக இயர், நெக் ஃபிட்டிங்க்ஸ், இமிடேஷன்ஸ், பேங்கில்ஸ், ஹேர் க்ளிப்ஸ், பேர்ல்ஸ் என்று பின்னி பெடல் எடுப்பார்கள். அடிஷ‌ன‌ல் பி.கு: இதெல்லாம் புது சுரிதாரை விட‌ காஸ்ட்லியாக‌ இருக்கும் :(

இது மட்டும் நிஜம்...

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

SanjaiGandhi said...

:)))))))))))))

மந்திரன் said...

கலக்கல் .... சரியா சொன்னீர் ...
புலம்பல் கொஞ்சம் அதிகம் தான் .
Why blood ?
Same blood ... :)

Karthik said...

rofl... :))))

வானம்பாடிகள் said...

புலம்பினாலும் இப்படி அழகாப் புலம்பணும்.

நாடோடி இலக்கியன் said...

:))

Anonymous said...

unakku romba than kozhuppu. nee ennavo salman rangela irukkura madhiri. but very very nice

இரும்புக்குதிரை said...

ரொம்ப நல்ல எலுத்து நடை. :)

முரளிகண்ணன் said...

கலக்கல்

Anonymous said...

Antha anani is for sure a GIRL. Dei thamabi sappai matter eluthi correct panneetta.

anani kitta cell number vaangu!

Related Posts with Thumbnails