அண்ணனை தேடி சென்னை வரும் நாயகன், ரெண்டு ரவுடி க்ரூப் நடுவே மாற்றிக் கொண்டு வெற்றியோடு ஊருக்கு திரும்புகிறானா இல்லையா என்பதை ஜில்ஜில் ஸ்ரேயாவுடன் சொல்லும் படம். ஆச்சரியம் ஆனால் உண்மை, படத்தின் இன்டெர்வெல் வரை ஃபைட்டே இல்லை, இது விஷால் படமா இல்லை மாற்றி வந்துட்டோமா என்று யோசிக்கும்போது ஃபைட் ப்ளஸ் ட்விஸ்ட்டுடன் இன்டெர்வெல்.
அதற்கு முன்வரை படத்திற்கு வந்தவர்களை "ஏன்டா வந்தோம், திரும்பிப் போயிடலாம்" என்று பயந்து யோசிக்கவிடாமல் உட்கார வைத்த பெருமை சந்தானத்தை மட்டும் சேரும். ஆறு அடிக்கும் மேலே, லேம்ப் போஸ்ட் மாதிரி இருந்து கொண்டு, வாயை ஒரு மாதிரி சுளித்துக் கொண்டு விஷால் காமெடி பண்ணும்போதும் வயிறு எரிகிறது. அதுவும் இல்லாமல் எப்பவும் ஒரு வாரம் குளிக்காதவன் மாதிரி அழுக்காகவும், ச்சே கொடுமைடா சாமி. நல்ல ட்ரெஸ்ஸா போடுங்க சார்.. சிம்பு பட வரிசையில் இனிமேல் இவர் படத்தையும் தாராளமாக சேர்க்கலாம்.
ஸ்ரேயாவின் தமிழ் சினிமா வரலாற்றில், இதுவரை சேலை கட்டிக் கொண்டு பாடல் காட்சிகளில் நடித்த முதல் படம். ரெண்டு நிமிஷம்தான் வந்திருப்பார், ரெண்டு பாட்டிலும் சேர்த்து. கேமராமேன், ஸ்ரேயா ஃபேன் போல, கன்னாபின்னா ஆங்கிளில் எடுத்து ஆசையை தீர்த்துள்ளார். அது சரி நடிப்பு, "அடப்போங்க சார்.. ரொம்ப குறும்பு நீங்க" என்று கேட்பார். ப்ரகாஷ்ராஜ், ஒரு ரவுடி க்ரூப்பின் தலைவர். படம் பார்க்கும் நமக்கே இதே போல் எத்தனை படத்தில் தான் நடிப்பார் என்று தோன்றுகிறது. அவருக்கு தோணாதா? புருவத்தில் மட்டும் வெள்ளை முடி டை அடித்து கெட்டப் மாத்தி இருக்கிறார். க்ளைமேக்சில் விஷாலிடம் கேவலமாக அடி வாங்கி செத்துப் போகிறார், கொடுமை நம்பர் ஒன். என்ன ப்ரகாஷ்ராஜ் ஸார், "அபியும் நானும்" ஃப்ளாப் ஆனதுனால ரொம்ப நஷ்டம் ஆகிப்போச்சா?????
இன்னொரு ரவுடியாக, "பொல்லாதவன்" கிஷோர். ரொம்ப அடக்கியே வாசித்து இருக்கிறார். இவர்கள் தவிர மலையாள லால், ஷாயாஜி ஷிண்டே, லிவிங்ஸ்டன், பாஸ்கர், பாண்டியராஜன் என பெரிய லிஸ்ட் உண்டு. ரெண்டு பாடல்கள் ஓ.கே. ஸ்ரேயா இருப்பதால் அதில் கான்சென்ட்ரேட் பண்ண முடியவில்லை. இடைவேளைக்கு அப்புறம் விஷால் பேசுவது எல்லாமே பஞ்ச் டையலாக். கொடுமை நம்பர் டூ. பிரகாஷ்ராஜ் கூட வரும் பாஸ்கர் அடிக்கும் "டைமிங் கமெண்ட்ஸ்" நல்ல காமெடி.
படத்தின் பெயரை "தோரணை" என வைத்துக் கொண்டு பாடல், பஞ்ச் டையலாக், வில்லன் என எல்லாரும் வார்த்தைக்கு வார்த்தை பேசிக் கொண்டிருப்பது போரடிக்கிறது. பை தி வே, தோரணை னா என்னன்னு என் ஃப்ரெண்ட்கிட்ட கேட்டேன். அவனுக்கும் தெரியலன்னு சொல்லிட்டான், கொடுமை நம்பர் த்ரீ. இடைவேளைக்கு பிறகு புத்திசாலத்தனமான காட்சி அமைப்புகளால், ஜஸ்ட் எஸ்கேப் ஆகி இருக்கிறது ஸ்கிரீன்ப்ளே ப்ளஸ் மூவி. நல்லவேளை, விஷாலின் அண்ணன் தப்பித்தார்.
தோரணை -- கரணம் தப்பினால் மரணம். தப்பவில்லை.
************************
தோரணை!
Labels:
Movie Review
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
னல்ல வேளை தப்பிச்சேன்
நான் கடவுள் இல்லை
எப்படி இருந்தாலும் ஸ்ரேயக்காக ஒரு தடவையாவது பாப்போம்ங்க.
kandippa pakkaren... net la than
actaully thoranai released in dubai,,we can never see this film when u read ur comments on this mail
Post a Comment