த்ரிஷாவின் டாட்டூவும், காத்ரினா ஆட்டமும்

கொஞ்ச நாளாக தொடர்ந்து எழுதவே முடியவில்லை. நானும் எப்படியாவது எழுதலாம் என்று பார்த்தால், முன்னர் இருந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போய் கொண்டிருக்கிறது. (அப்பாடா...)

"பசங்க" முதல் நாளே பார்த்துவிட்டேன். "புஜ்ஜிமா"வாக நடித்த குழந்தையை அப்படியே அள்ளி அவனுக்கு கன்னம் வலிக்கும்வரை முத்தம் கொடுக்க வேண்டும் என்று வில்லத்தனமான ஆசை ட்ரெயிலர் பார்க்கும்போதெல்லாம் தோன்றிக் கொண்டிருக்கிறது. தீம் கூட ஓகே.. சில்ரன் ஆஃப் ஹெவனில் இருந்த யதார்த்தம் அங்கங்கே மிஸ்ஸாகிறது போல் தோன்றுகிறது. ஆனால் எனக்கு ரொம்ப பிடித்த படம்.

"சர்வம்" கூட முதல் நாளே.. பீமா படத்தில் த்ரிஷா, வலது தோள்பட்டைக்கு கொஞ்சம் இல்லை ரொம்ப கீழாகவே குத்திக் கொண்ட டாட்டூ இன்னும் போகவில்லை போல.. எல்லா பாட்டிலும் ரொம்ப க்ளியராக தெரிகிறது. ரொம்ப இம்சை பண்ணுது.. ம்ம்ம்ம்ம்ம்... அஜீத், மாதவன் வரிசையில் ஆர்யா.. டான்ஸில் கெட்ட சொதப்பு சொதப்புகிறார். "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" ப்ரோக்ராமை தொடர்ந்து பார்க்க சொல்ல வேண்டும். ம் படம் எப்படியிருக்கு? "மரணம் இன்னொரு உயிரின் தொடக்கம்" என்று டைட்டில் கார்டில் பைபிள் வார்த்தையை ஸ்லைடுகிறார்கள். அப்பவே தெரிந்து விட்டது கதை.. மிச்சமெல்லாம் ஆவ்வ்வ்வ்வ்... எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கொடுத்த காசு த்ரிஷா டாட்டூவை பார்த்தத‌ற்கு சரியாகப் போய்விட்டது.

ஒரு வழியாக எலெக்சன் முடிந்துவிட்டது. இதை மன்மோகன் சிங் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார். எல்லாப் புகழும் ராகுலுக்கே.. அப்படி இப்படி என்று ஐபிஎல்லும் முடிந்துவிட்டது. டெக்கான் சார்ஜர்ஸ், நல்ல டீம் என்றாலும், என்னால் முடிவை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. வோடஃபோன் ஜூஜூவை ரொம்ப மிஸ் பண்ண போகிறேன். மைக்கேல் ஜாக்சன் போல ஈபிள் டவர் முன்னால் காதலி பின்னால் சுற்றும் ஜூஜூ தான் ரொம்ப ரொம்ப ஃபேவரைட். அப்புறம் அந்த Beauty Alerts.. ச்சான்ஸே இல்லை.. நைஸ் க்ரியேட்டிவிட்டி.. Closing ceremony ல் காத்ரீனா கைஃப் போட்ட ஆட்டம் அட்டகாசம். ஒல்லிக்குச்சியாய் இருந்தவர் இப்போது கொஞ்சம் பூசினாற் போல ரொம்ப சூப்பர்ப். என்னுடைய ஃபேவரைட் ஸ்டார்.

இந்த இரண்டும் முடிந்து விட்டது இனிமேல் டைம் பாஸ் பண்ண.. கிண்டல் பண்ண.. சீக்கிரம் விஜய் படத்தை ரிலீஸ் பண்ணுங்கப்பா.. அட அதுக்கு முன்னால் டி20 வேர்ல்டு கப் இருக்குல்ல.. அதுவரைக்கும் சீஸரும், மேன்ஷன் ஹவுஸும்.. ஓ.கே..

சந்தேகம்: இனிமேல் "மத்திய அமைச்சர் அண்ணன் அழகிரி வாழ்க" என்று மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு கத்தினால் 1000 ரூபாய் தருவார்களா????

************************

4 comments:

Anonymous said...

///இனிமேல் "மத்திய அமைச்சர் அண்ணன் அழகிரி வாழ்க" என்று மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு கத்தினால் 1000 ரூபாய் தருவார்களா????///

மேலும்,,,
1.மதுரையை தமிழகத்தின் துணைத்தலை நகராக மாற்றுவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

2.தமிழகத்தில் நலிந்திருக்கும் உரத்தொழிற்சாலைகளை அண்ணன் அழகிரி பெயரில் மாற்றும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

3.மதுரையையும், டெல்லியையும் இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அமல் படுத்த வல்லுனர் குழு அமைக்கப்படவுள்ளது.

ராஜன் said...

//3.மதுரையையும், டெல்லியையும் இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அமல் படுத்த வல்லுனர் குழு அமைக்கப்படவுள்ளது.//

யோவ்... யாருய்யா இது.... சிரிச்சி சிரிச்சி வயிரு புண்ணாயிடுச்சி...

SUREஷ் said...

//இந்த இரண்டும் முடிந்து விட்டது இனிமேல் டைம் பாஸ் பண்ண.. கிண்டல் பண்ண.. சீக்கிரம் விஜய் படத்தை ரிலீஸ் பண்ணுங்கப்பா..//

ஆமா..,, ரொம்ப மிஸ் பண்ணுறோம்

ஆளவந்தான் said...

//
சந்தேகம்: இனிமேல் "மத்திய அமைச்சர் அண்ணன் அழகிரி வாழ்க" என்று மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு கத்தினால் 1000 ரூபாய் தருவார்களா????
//
செவுட்ட்லேயே அடிப்பாய்ங்க..


பிரதம மந்திரி பத்வியை மன்மோகனுக்கு விட்டு குடுத்த அழகிரி வாழ்கனு சொல்லுங்க உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கு :))))

Related Posts with Thumbnails