ஆஃபிஸில் இருந்து சீக்கிரம் கிளம்ப சொல்லிவிட்டார்கள்..
பஸ் ஓடவில்லை.. ஷேர் ஆட்டோவில் டிரைவர் சீட்டில் நாலு பேருடன் எல்லீயட்ஸ் பீச் சடன் விசிட்..
எதிர்பாராமல் காதலியுடன் காதலன் குல்ஃபி ஐஸ் சாப்பிட சான்ஸ்..
சன் மியூசிக்கில் "பளபளக்கிற பகலா நீ" சூர்யா 1000வது முறையாக ஆட்டம்
ங்கொக்காமக்கா.. ஒரே செகண்டில் ஷேர் மார்க்கெட் 2000 புள்ளிகள் ராக்கெட் வேகத்தில் சீறியது..
ஐபிஎல் மேட்ச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூருவிடம் தோத்துப் போச்சி.. டெய்லர் கட்டையில் போக..
டாஸ்மாக்கில் தள்ளுமுள்ளு வழக்கம்போல்.. பீர் கூலிங்கா இல்லை.. கல்யாணி கூட இல்லை..
சிரித்தபடி மன்மோகன்சிங் ராஜினாமா கடிதம் பிரதீபாவிடம் கொடுத்தார்..
தமிழனுக்கு தந்தி அடிக்க சொன்ன கலைஞர், தம் மக்களுக்கு கேபினட் சீட் வாங்க டெல்லி பயணம்.. சன் நியூஸில் ஃப்ளாஷ் நியூஸ் ஸ்க்ரோல் ஓடுகிறது..
தலப்பாக்கட்டு பிரியாணியில் லெக்பீஸ் கிடைத்தது.. கொஞ்சம் காரம்..
சத்யம் தியேட்டரில் சர்வம் படம் செகண்ட் ஷோ.. ரூம்மேட்ஸூடன்.. செம குளிரு...
ச்சே.. திரிஷாவ இன்டெர்வெல்ல சாகடிச்சிட்டாங்க..
த்தூ..வழக்கம்போல் தமிழன் ஒருவனுக்கும் வெட்கமில்லை..
தன்மானத் தமிழன் வீட்டுக்குள் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறான்.. சிலர் பதிவுகள் எழுதி, இது பொய்யான செய்தி என தமிழ்கூறும் நாசமாபோன உலகிற்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்..
****************************
தமிழன் ஒருவனுக்கும் வெட்கமில்லை..
Labels:
LTTE,
news,
Prabhakaran
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ippothu thanmaana tamilan ithai thavira veru enna seiya mudiyum.....
ஏண்ணே.. தாத்தா இந்த வயசுல,
டெல்லி போறத்துக்கு பதிலாக
ஒரு தந்தி அடிக்கலாமோ, இல்லியோ?
இதை பார்த்துக்கொண்டு இப்படி ஒரு பதுவுபோட்ட ஒனக்கு ஒண்ணுமே இல்லை
இன்னும் கொஞ்ச நாள்ள அவன்னவன் வீட்டுல இலவு உழுந்தாலே அழுவமாட்டானுங்க! அடப்போங்க நண்பா என்னத்தச்சொல்ல
இதை ஒத்த கருத்துடன் நானும் ஒரு பதிவிட்டேன்.
http://joeanand.blogspot.com/2009/05/blog-post_20.html
இப்போது நாம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி உதவுவது என்று சிந்திக்க வேண்டும்.
Post a Comment