கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
ட்ரீட் கெளம்ப வேண்டிய நேரம் நெருங்கியது. அம்மாவிடம் இருந்து கால்.
"டேய், இந்த வாரம் ஊருக்கு வர்றீயா?"
"இல்லமா. நான் வரல"
"ஏன்டா? மூணு நாள் லீவ் இருக்குல்ல?"
"எனக்கு இங்க ஆயிரம் வேல இருக்கும்மா. அதெல்லாம் இப்ப சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நைட் ரூம்லர்ந்து கூப்பிடுறேன். வைக்கிறேன். பை"
அஞ்சப்பர் ஹோட்டல். 15 பேர் சூழ ஒரே வேடிக்கையாய் இருந்தது. கணேஷ் பக்கத்தில் சியாமளா. இந்த மதிய வேளையிலும், Eva வோ Blue Lady யோ, அதன் வாசனையில் ஏ.சி அறையில் கணேஷ்க்கு கிறக்கத்துடன் வியர்த்தது.
"டேட் கன்ஃபார்ம் ஆயிடுச்சி தெரியுமா?" சியாமளா தான் ஆரம்பித்தாள். நேரடியாக பேசவில்லை. கிசுகிசுத்தாள்.
"என்ன டேட்? மேரேஜ் டேட்டா?" கத்தினான்
"மெதுவா பேசு. ஆன்சைட் ட்ராவல் டேட். கம்மிங் சன்டே"
"ஓ.. ஐ ஸீ" வியர்வையை ஒற்றி எடுத்தபடியே. "இவ வேற.. காதுக்குள்ள ரகசியம் பேசுற மாதிரி பேசுறாளே? இது வேற என்னன்னமோ பண்ணுது?" மைண்ட் வாய்ஸ்.
"இன்னிக்கு ஊருக்கு போகலாமா? ஆன்சைட் போறதுக்கு முன்னாடி வீட்ல ரெண்டு நாள் இருந்துட்டு வரலாம்"
"ஓ, எஸ். பட் டிக்கெட்ஸ்?" கொஞ்ச நேரம் முன்னாடி அம்மாவிடம் இதே விஷயத்திற்காக கத்தியது கொஞ்சம் கூட நினைவில் இல்லை.
"நான் நேத்தே நம்ம ரெண்டு பேருக்கும் சேர்த்து புக் பண்ணிட்டேன். பர்வீன் ட்ராவல்ஸ். ஸோ, நோ ப்ராப்ளம்!" கண்ணடித்தாள்.
இரவு 9.30. பர்வீன் ட்ராவல்ஸ், திண்டிவனம் தாண்டி சீறிக் கொண்டிருந்தது.கணேஷ் பக்கத்தில் சியாமளா. பத்து மணிநேரத்திற்கும் மேலாக அவளுடன் முதன்முறையாக ஒன்றாக இருக்க போகிறோம் என்ற எண்ணமே கணேஷ்க்கு கிளர்ச்சியாக இருந்தது. காதலி or கல்யாணம் பண்ணிக்க போகிறவள் கூட இரவு நேரத்தில் இந்த மாதிரியான பஸ் பயணம் சொர்க்கம். இதெல்லாம் ட்ரெயினில் ஏ/சி கோச்சில் தனிதனி பெர்த்தில் பயணம் செய்தாலும் கெடைக்காது. அந்த அரைகுறை வெளிச்சமும், ஜன்னல் வழி வரும் குளிர்காற்றுடன், ரெண்டு பேரும் மட்டும் காதுகளுக்குள் பேசி கொள்வது சுகமான விஷயம்.
"உன்ன பத்தி ஆஃபிஸ்ல சொன்னாலே, எல்லாரும் டெரர் ஆகுறாங்களே. ஏன்?" கணேஷ் ஆரம்பித்தான்.
நன்றாக வாய்விட்டு சிரித்துக் கொண்டு, "என்ன சொல்றாங்க?"
அரை நிமிடம் யோசித்துவிட்டு, "ம்ம்.. அந்த நியூஇயர் பார்ட்டில எதுக்கு ஒருத்தனை அடிச்ச?"
"அதுவா.. தண்ணியடிக்கிற நாய், ஒழுங்கா தண்ணி மட்டும் அடிச்சிட்டு போனா எதுக்கு அடிக்கிறேன். என் கூட இருந்த ஜூனியர் பொண்ணு துப்பட்டாவ பிடிச்சி இழுத்து கலாட்டா பண்ணான். பாவம், அவ அழுக ஆரம்பிச்சிட்டா. வந்தது கோவம், பளார்ன்னு அறைவிட்டேன்"
அவள் முகத்தை பார்க்காமல், "தண்ணியடிக்கிறவங்கள பொத்தாம் பொதுவா நாய்ன்னு சொல்லக்கூடாது. அவங்களுக்கு என்ன பிரச்சினையோ?"
கொஞ்சம் நேரம் பதிலே வராமல் போகவே, அவளை திரும்பி பார்த்தான்.
சியாமளா முகத்தைக் கிட்ட கொண்டு வந்து, "த்தூ" என செல்லமாக கடித்தாள். "அங்க இருந்த நெறைய்ய பேருக்கு, அவனை அடிச்சது மட்டும் தான் தெரியும். அதுக்கப்பறம் எல்லாரும் என்ன பார்த்து பயப்படுற மாதிரி நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதுவும் எனக்கு பிடிச்சிருந்தது, அப்படியே விட்டுட்டேன்"
"அதான் ஏன்? எல்லாரையும் போலவே ஜோவியலா, சோஷியலா பழக வேண்டியது தான?
"எனக்கு அதெல்லாம் பிடிக்காது. ஆஃபிஸ்ல தேவையில்லாம எவன்கிட்டயும் சிரிக்குறது பிடிக்காது. எதுக்கெடுத்தாலும் வெட்கப்படுறதும் பிடிக்காது. கொஞ்சம் சிரிச்சி, சோஷியலா பழகுனாலே, எல்லாரும் அட்வான்டேஜ் எடுத்துக்கிறதும் செம கடுப்பு. ஸோ, நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேன். இது ஒண்ணும் தப்பு இல்லையே?"
"ம்ம்.. குட். ஆமா ஹரிணி எங்க போயிட்டா? ரெண்டு நாளா ஆளைப் பார்க்கவே முடியல?"
அதுவரை நார்மலாக பேசிக் கொண்டிருந்தவள், முகம் டென்ஷன் ஆனது, "அன்னைக்கு நான் போட்ட போடுல, பெங்களூர்க்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போயிட்டா. இனிமே அவ இந்த பக்கம் வர மாட்டா. அது சரி, ஸார் பெரிய ஆள் போல.. நெறைய்ய கேர்ள் ஃப்ரண்ட்ஸ் இருக்காங்களா?"
"நோ நோ" அவசரம் அவசரமாக மறுத்தான் "அதான் நீயே பார்த்தேல்ல. நான் அவகிட்ட ஒரு வார்த்தை கூட பேசினதே இல்ல. அவளா தான்..."
"ஓ.. பேசி பழகாமாலே நெறைய்ய பேரை இன்ஃப்ளூயன்ஸ் பண்ணி இருக்கீங்க. ம்ம் சூப்பர்" பேச்சில் நக்கல் தெறித்தது, "இதெல்லாம் இதோடு நிறுத்திக்கோ. இனிமே இதுமாதிரி நான் கேள்விப்பட்டேன், கொன்னே போட்ருவேன்"
அவன் கண்கள் விரிந்தது. ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும்.
"உன்ன இல்ல.. அந்த பொண்ணை.."
திவியின் முகம் ஒரே ஒரு செகண்ட் பென்டுலம் மாதிரி மனதில் க்ராஸ் பண்ணி சென்றது.
"ஹேய்ய்ய்.. என்ன கோச்சிக்கிட்டீயா.. ரிலாக்ஸ்"
"ச்சே ச்சே இல்ல.. மதுரைலர்ந்து எப்படி ஊருக்கு போவ?"
"ரொம்ப அக்கறை போல. அப்படின்னா, எங்க ஊர் வரைக்கும் வந்து விட வேண்டியது தானே?"
"அய்யோ.. உங்க அப்பா, மீசைய பார்த்தாலே அடிவயித்துல 'பக்'னு இருக்கு"
"ஹா ஹா. டோன்ட் வொர்ரீ. அப்பா கார் எடுத்திட்டு மாட்டுத்தாவணில வெயிட் பண்ணுவாரு. அங்க இருந்து பெரியகுளம் போயிடுவோம்"
"ம்ம்ம்"
அப்படியே தூங்கிப் போனாள். தூக்கத்தில் தோள்களில் சாய்ந்துகொண்டாள். கணேஷ்க்கு ரொம்ப பிடித்து இருந்தது. கைகளை எடுத்து சீட்டின் பின்னால் வைத்துக் கொண்டு அவள் தூங்குவதற்கு ஏதுவாக வைத்துக் கொண்டான். அவள் இன்னும் வசதியாக சாய்ந்து கொண்டாள். கணேஷ்க்கு தூக்கம் வரவில்லை. அந்த அரைகுறை வெளிச்சத்தில், சியாமளா தூங்குவதை காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதே நேரம் "கொன்னே போட்ருவேன்.. உன்ன இல்ல.. அந்த பொண்ணை" வார்த்தைகள் திடீரென நினைவில் வந்ததும் திவ்யாவை, இனிமேல் லைஃபில் நினைத்துக் கூட பார்க்க கூடாது. சியாமளா மாதிரியான பெண் லைஃப் பார்ட்னாராக அடைவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
ஆன்சைட் முடிஞ்சு வந்தவுடன் உடனே அடுத்த முகூர்த்தத்தில் கல்யாண தேதி குறிக்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருந்தான், ஆன்சைட்டில் நடக்க போகும் விபரீதங்கள் தெரியாமல்
*****************************************
சியாமளா-12: பஸ் பயணம்!
Labels:
கணேஷ்-சியாமளா
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
கணேஷ் இந்த தொடர் இன்னைக்கு தான் படித்தேன். மற்ற எப்பிசோடெல்லாம் முழுதாய் படித்ததில்லை. இப்போது படிக்கவேண்டும் போல் இருக்கிறது.நல்லா எழுதியிருக்கிறீர்கள்.
ஆமா திவ்யா என்ன ஒரே சஸ்பென்சா இருக்கே....
கணேஷ்
கதை பர்வீன் ட்ராவல்ஸ் பஸ் மாதிரி சும்மா ஜிவ்னு போகுது
அப்படி என்னதாங்க நடந்துச்சு ஆன்சைட்ல எதிர்பார்ப்புகளுடன்..............
திவ்யா ebtry on site லயா ???
//ஆன்சைட்டில் நடக்க போகும் விபரீதங்கள் தெரியாமல்//
எதுக்கும் சியாமளாகிட்ட பூரிக்கட்டை கையோட எடுத்துக்கிட்டு போக சொல்லுங்க :)
Etha padikkumbothu sathiyama unnoda karpanai thaan nu nenaika mudila da...
Epadiyo! Nalla iruntha sari.
ஆமா ஹரிணி எங்க போயிட்டா? ரெண்டு நாளா ஆளைப் பார்க்கவே முடியல?
திவியின் முகம் ஒரே ஒரு செகண்ட் பென்டுலம் மாதிரி மனதில் க்ராஸ் பண்ணி சென்றது.
//
என்ன கொடுமை சார் இது!! இப்போ கூட என்னோட ஞாபகம் வரலையே கணேஷ்க்கு! நான் என்ன தான் செய்ய???
ஓ.. பேசி பழகாமாலே நெறைய்ய பேரை இன்ஃப்ளூயன்ஸ் பண்ணி இருக்கீங்க. ம்ம் சூப்பர்"
It is not influence... Impress
"ஆன்சைட்டில் நடக்க போகும் விபரீதங்கள் தெரியாமல்"
கணேஷ், சியாமளா அடிச்சா தாங்க மாட்ட
ஆன்சைட் முடியர மட்டும் தூங்க மாட்ட
:-)
நன்றி VISA!
கணேஷ் இந்த தொடர் இன்னைக்கு தான் படித்தேன். மற்ற எப்பிசோடெல்லாம் முழுதாய் படித்ததில்லை. இப்போது படிக்கவேண்டும் போல் இருக்கிறது.நல்லா எழுதியிருக்கிறீர்கள்.//
Welcome Back!
ஃபுல்லா படிங்க. நல்லா இல்லைன்னா திட்டுங்க :)
****************************
நன்றீ மணி!
ஆமா திவ்யா என்ன ஒரே சஸ்பென்சா இருக்கே....//
சஸ்பென்ஸ் எல்லாம் கெடையாது பாஸ். நார்மல் ஃபுளோ தான் :)
****************************
நன்றீ கரிசல்காரன்!
கணேஷ் கதை பர்வீன் ட்ராவல்ஸ் பஸ் மாதிரி சும்மா ஜிவ்னு போகுது//
பர்வீன் ட்ராவல்ஸ் ஜிவ்வுன்னு போகுமாங்க? தேங்க்ஸ் :)
****************************
நன்றி Sangkavi!
அப்படி என்னதாங்க நடந்துச்சு ஆன்சைட்ல எதிர்பார்ப்புகளுடன்..//
பெரிசா ஒண்ணும் இல்லைங்க.. Keep Reading!
****************************
நன்றீ gopi!
திவ்யா ebtry on site லயா ???//
எனக்கு கதை சொல்லவே தெரியலீங்க? :(
****************************
நன்றி சின்ன அம்மிணி!
எதுக்கும் சியாமளாகிட்ட பூரிக்கட்டை கையோட எடுத்துக்கிட்டு போக சொல்லுங்க :)//
குட் ஐடியா. சொல்லிடுறேன் :)
****************************
நன்றீ Shankar!
Etha padikkumbothu sathiyama unnoda karpanai thaan nu nenaika mudila da... //
டேய் நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டா? நானே அப்படி இப்பிடின்னு ப்ளாக் வழியா ஏதோ செட்டில் ஆகியிருந்தா, இது அனுபவம் தான் கற்பனை இல்லன்னு சொல்லி, குதூகலாமா போய்கிட்டு இருக்க இடத்துல கும்மி அடிக்கிறீயே?
Epadiyo! Nalla iruntha sari.//
இனிமே என்னத்த?
****************************
நன்றி Shalini!
என்ன கொடுமை சார் இது!! இப்போ கூட என்னோட ஞாபகம் வரலையே கணேஷ்க்கு! நான் என்ன தான் செய்ய???//
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :)
****************************
நன்றீ Anonymous!
It is not influence... Impress//
மாத்திடுறேங்கண்ணா :)
****************************
நன்றி ♠புதுவை சிவா♠
"ஆன்சைட்டில் நடக்க போகும் விபரீதங்கள் தெரியாமல்"
கணேஷ், சியாமளா அடிச்சா தாங்க மாட்ட
ஆன்சைட் முடியர மட்டும் தூங்க மாட்ட
:-)//
பாஸ், நான் விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருக்கேன். எப்படி இப்பிடில்லாம் :)
****************************
பதிவை விட புதுவை சிவா கமெண்ட் சிரிச்சு மாளல :)
ஆமா சின்ன அம்மணி பூரிக்கட்டை மேல ஒரு கண்ணாவே இருக்காங்களே ஏன் கணேஷ்? :)
அடுத்த எபிசோடு மதுரை டூ பாரினா :)
இன்னைக்கு தான் இந்த பிளாக்குகே வந்தேன்....
ஆனா இந்த கதைய முழு மூச்சா வாசிச்சிட்டேன்.. எப்ப அடுத்த பாகம்...
நாளைக்கு exam...இருந்தும் உங்க episode 1 வாசிக்க தொடங்கினதில இருந்து நிற்பாட்ட முடியல....
சொல்ல மறந்திட்டனே... பின்னுறீங்க தலைவா..
கதையில முடிச்சு குடுத்து ட்விஸ்ட் வைக்கிறது கைகூடியிருச்சு போல! கலக்குங்க கலக்குங்க! :)
appuram..?
நன்றீ ☀நான் ஆதவன்☀
பதிவை விட புதுவை சிவா கமெண்ட் சிரிச்சு மாளல :)//
அட ஆமாங்க.. சிம்பிளா சிரிக்க வச்சிட்டாரு.. :)
ஆமா சின்ன அம்மணி பூரிக்கட்டை மேல ஒரு கண்ணாவே இருக்காங்களே ஏன் கணேஷ்? :)//
தெரியலீங்க.. கணேஷ் அடிவாங்குறதுல அவங்களுக்கு ஆனந்தமாக இருக்கலாம் :)
அடுத்த எபிசோடு மதுரை டூ பாரினா :)//
எனக்கு கதை சொல்லவே தெரியலீங்க :(
****************************
நன்றி Thinks Why Not - Wonders How!
இன்னைக்கு தான் இந்த பிளாக்குகே வந்தேன்....
ஆனா இந்த கதைய முழு மூச்சா வாசிச்சிட்டேன்.. எப்ப அடுத்த பாகம்...
நாளைக்கு exam...இருந்தும் உங்க episode 1 வாசிக்க தொடங்கினதில இருந்து நிற்பாட்ட முடியல....
சொல்ல மறந்திட்டனே... பின்னுறீங்க தலைவா..//
உங்களின் மனம் திறந்த பாராட்டுகளுக்கு நன்றி :)
****************************
நன்றி ஊர்சுற்றி!
கதையில முடிச்சு குடுத்து ட்விஸ்ட் வைக்கிறது கைகூடியிருச்சு போல! கலக்குங்க கலக்குங்க! :)//
அப்படீங்குறீங்க.. நம்பவே முடியல :)
****************************
நன்றி Cable Sankar!
appuram..?//
சீக்கிரமாவே :)
****************************
Nice story.
Keep it up.
Sorry, ganesh, cant cum online these days..
enjoyed this episode.. detail la comment poda mudiyala..
mum dad thollai thaangala, hehehe
ippo than romba naalaiku aprm neenga kathai eluthunathu pola irukku..
all the best, keep it up laam illa..
fansa seththutteenga. ini avangala thirupthi paduththanum.. illana poorik katta thaan.. :)
நன்றீ நாடோடிப் பையன்!
நன்றி Nisha!
Sorry, ganesh, cant cum online these days..//
:) :)
enjoyed this episode..// :))
detail la comment poda mudiyala..//
இதெல்லாம் ஒரு மேட்டரா?
mum dad thollai thaangala, hehehe// :) :) :)
ippo than romba naalaiku aprm neenga kathai eluthunathu pola irukku..//
ஆமாங்க.. போன வாரம் அடுத்த பார்ட் போட முடியல.. ஆனா, நாளைக்கு கண்டிப்பா அடுத்த பார்ட் வரும்.
all the best, keep it up laam illa.. // வேற?
fansa seththutteenga. ini avangala thirupthi paduththanum.. illana poorik katta thaan.. :)//
நீங்க வேற, ஏன் பூரிக்கட்டைய நியாபகப்படுத்துறீங்க.. :)
*********************
Post a Comment