கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10
மீட்டிங் முடிந்து எல்லாரும் அவரவர் இடத்திற்கு போனார்கள். கணேஷ், சியாமளாவை எட்டிப் பார்த்தான். அவள் மானிட்டர் முன் தலையை குனிந்து உட்கார்ந்திருந்தாள். இந்த நேரத்தில் அவளை போய் பார்த்து பேசுவது, சாத்தானுடன் நள்ளிரவில் தோளில் கைபோட்டு பேசுவதற்கு சமம் என முடிவெடுத்ததால், இடத்தில் உட்கார்ந்தான்.
"என்ன பண்ணலாம்? இவளைக் கன்வின்ஸ் பண்ணலாமா இல்லை இது தான் கேப்புன்னு இவகிட்ட இருந்து எஸ்கேப் ஆகிடலாமா? ஆனாலும் நான் சொன்ன மாதிரியே ஒரு ஃபிகர் அதே பேர்ல வருவான்னு கனவுல கூட திங்க் பண்ணது இல்ல. இவ சியாமளாவ விட சூப்பரா, செமத்தியா வேற இருக்கா" இதே போல் ஏகப்பட்ட விஷயங்கள் மண்டையில் ஓடினாலும், கடைசியில் 'ஜீன்ஸ் போட்ட மஹாலெட்சுமி' தான் ஜெயித்தாள். (இன்னைக்கு ஜீன்ஸ் இல்ல. சுரிதார்)
ஆஃபிஸ் கம்யூனிகேட்டரில் சியாமளாவிற்கு ping பண்ணினான்
"Hi Shyamala"
முழுதாக ரெண்டு நிமிடம் கரைந்த பின், அவளிடமிருந்து
"Go to HELL"
"உன்கூட பேசுறப்பல்லாம் நான் அங்க இருந்து தான் பேசுற மாதிரி இருக்கு" மறுபடியும் மைண்ட் வாய்ஸ். இருந்தாலும் அவள் டென்ஷனில் இருப்பதால், கூல் பண்ண ட்ரை பண்ணினான்.
"Shall v go for Lunch?"
"Go to HELL"
"அங்க போய் என்னத்த சாப்பிடுறது?" என நினைத்துக் கொண்டு, அவளை கூல்டவுன் பண்ணும் முயற்சியை சந்தோஷமாக விட்டுவிட்டான்.
மணி வேற மதியம் 1:30 தாண்டி ஓடிக் கொண்டிருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது.
"கணேஷ், சாப்பிட போகலாமா?" என ஸ்வீட் வாய்ஸ் அவனைக் கூப்பிட்டது
"ஓ.. ஷ்யூர்" என மின்னல்வேகத்தில் பதில் சொல்லிவிட்டு யோசித்தான் "இது சியாமளா குரல் இல்லையே?" என்று சொல்லிக் கொண்டே எழுந்து பார்த்தால் "ஹ...ரி....ணி"
அப்படியே ஷாக்காகி நின்றிருந்தான். நல்லவேளை, சியாமளா இடத்தில் இல்லை. அப்படியே சைலண்டாக இடத்தில் உட்கார்ந்தான். "இவ வந்த முதல் நாளே, பேர் சொல்லி கூப்பிடுற அளவுக்கு வந்துட்டா?" என மனதிற்குள் நினைத்துக் கொண்டான். அப்போது தான் பின்னால் ஒரு உருவத்தின் நிழலைக் கவனித்தான். சேரில் உட்கார்ந்து கொண்டே திரும்பி பார்த்தால், சியாமளா முறைத்து நின்று கொண்டிருந்தாள்.
"ஆஹா, ஒரு பிசாசுகிட்ட இருந்தா தப்பிச்சு, கொள்ளிவாய் பிசாசுகிட்ட மாட்டிக்கிட்டோமே?"
கணேஷுக்கு என்ன ரியாக்ட் பண்ணுவதென்றே தெரியவில்லை. திருடிவிட்டு அப்பாவிடம் மாட்டிய குழந்தை மாதிரி கன்னாபின்னாவென்று முழித்தான். சிரிக்க ட்ரை பண்ணான். அடுத்த செகண்டே மாறி உம்மென்று வைத்துக் கொண்டான். விட்டத்தை வெறித்து பார்த்தான். அப்பவும் சியாமளா வெறித்த கண்களுடன், நேராக கணேஷை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அப்போது ஹரிணி, கணேஷ் இடத்திற்கு வந்தாள். பிசாசும், கொள்ளிவாய் பிசாசும் ஒரே இடத்தில்.
"இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க. வாங்க கணேஷ், சாப்பிட போகலாம்" என்றாள் ஹரிணி.
நெளிந்தான். "ஓ.கே. சியாமளா, வா சாப்பிட போகலாம்" என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் நகர்ந்தான். பின்னாலே சியாமளா. அவள் பின் ஹரிணி.
6 பேர் உட்காரக்கூடிய பெரிய டேபிள். கணேஷ் பக்கத்தில் பி.எம். கணேஷ்க்கு எதிரில் சியாமளா. அவள் பக்கத்தில் ஹரிணி. மத்த சீட்களில் சிறுவாணி, மதுரை, பாப்கட் உட்கார்ந்தனர்.
"கணேஷ், என்ன நியாபகம் இருக்கா? உங்க பழைய ஆஃபிஸ் தான்" ஹரிணி முதல் அணுகுண்டை வீசினாள்.
திரும்பவும் நெளிந்தான். "ஒழுங்கா சாப்பாடு கூட சாப்பிட விட மாட்டேங்குறாய்ங்க. அழகா இருந்தாலே இது ஒரு பிரச்சினை" என்று கருவிக் கொண்டே, "இல்லங்க. நியாபகம் இல்ல" இந்த பதில் சொல்லும் வரை சியாமளா, கணேஷையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"ஓ.கே. நான் அப்ப உங்க டீம் இல்ல. என் ஃப்ரண்ட் ஷாலினி தான் உங்கள பத்தி அடிக்கடி சொல்லுவா. அந்த கிரிக்கெட் டோர்னமென்ட்ல, உங்க பேட்டிங்க பார்க்குறதுக்காக, நானும் ஷாலினியும் வந்திருந்தோம். அந்த மேட்ச்ல கூட நீங்க தான ஓப்பனிங் பேட்ஸ்மேன்" ஹரிணி பிசாசு வேலையை இனிதே ஆரம்பித்தது.
"அய்யோ என்னடி சொல்ற.. ஷாலினின்னு ஒருத்தி வேற இருக்காளா? டோர்னமென்ட்.. ரைட். கல்யாணத்துக்கு முன்னாடியே, பொண்டாட்டி கையால அடி வாங்குனது நானாக தான் இருக்கும்" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, சியாமளாவைக் கவனித்தான். அவள் ஆர்வம் காட்டாமல் மெதுவாக தட்டில் ஸ்பூனால் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.
"ஓ.. அப்படியா.. அது சூப்பர் மேட்ச்" பட்டும்படாமலும் பேசினான்.
"ஆமா. அந்த மேட்ச்ல ஜெயிச்சதுக்கு உங்க டீம் க்ரீன்பார்க்ல கொடுத்த பார்ட்டிக்கு, நானும் வந்திருந்தேன். யப்பா.. என்ன ஒரு ஆட்டம்.. ஏழு ரவுண்ட் தண்ணி அடிச்சிருப்பீங்களா?..'பொல்லாதவன்' எங்கேயும் எப்போதும் பாட்டுக்கு நீங்க போட்ட ஆட்டம்..ச்சான்ஸே இல்ல"
கணேஷுக்கு தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது. "சதிகாரி, என்ன சாவடிக்காம இங்கே இருந்து போக மாட்டா போல இருக்கே. ரெண்டு கன்னத்துலயும் சூடு கண்டிப்பாக விழும்" பின் சத்தமாக, "ஓ.. இதெல்லாம் நோட் பண்ணீங்களா? க்ரேட். சூப்பர்ப் பார்ட்டி அது?" மறுபடியும் பட்டும்படாமலும் சொன்னான்.
"பின்ன.. அந்த நியூஇயர் பார்ட்டில கூட ஒரு பாட்டு ஸ்டேஜ்ல பாடுனீங்களே? அது கூட.. ப்ரசன்னா படம்.. ம்ம்ம்"
"'அழகிய தீயே' விழிகளின் அருகினில் வானம்.. அது தான.. என்னோட ஃபேவரிட் ஸாங்" அவனையும் அறியாமலேயே உற்சாகத்துடன் பேசினான்.
"யெஸ்.. அது தான். அப்ப இருந்து எப்ப ப்ரசன்னாவ பார்த்தாலும் எனக்கு உங்க நியாபகம் தான். நீங்களும் ப்ரசன்னா மாதிரி ஸ்மார்ட்டா இருக்கீங்க. I'm a crazy FAN of you" சொல்லிவிட்டு வெட்கத்தில் தலையைக் குனிந்தாள் ஹரிணி.
கணேஷுக்கு அவன் இதயம் வெடிப்பது போல இருந்தது. கொஞ்சம் கூட கேப் இல்லாமல், சியாமளா கத்தினாள், "எக்ஸ்கியூஸ் மீ!"
"யெஸ்"
"He is my Fiancee!"
"வாட்?" ஹரிணியிடம் இருந்து
"வாட்??" எல்லாரிடமும் இருந்து கோரஸாக.
*****************************
சியாமளா-6: இரண்டு பெண்களும், பிசாசுகளும்!
Labels:
கணேஷ்-சியாமளா
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
அழகா இருந்தாலே இது ஒரு பிரச்சினை
//ஹி... ஹி... ஹி...
அய்யோ என்னடி சொல்ற.. ஷாலினின்னு ஒருத்தி வேற இருக்காளா?
// Hello Sir!! என்ன
மறந்தாச்சா???
நிஜங்களை வச்சு கதை எழுதுறாரோ ஷாலினி சண்டைக்கு வருகிறார்,
//He is my Fiancee!"//
இப்படி சீக்கிரமே சஸ்பென்ஸை உடைச்சிட்டீங்களே!!!
//கொல்லிவாய் பிசாசும்//
கொள்ளிவாய்ப்பிசாசுங்க அது
//He is my Fiancee!"//
வாட்!!! அப்ப கதை முடிய போகுதா?
கணேஷ் ஏன் சியாமளாவைப் பார்த்து பயப்படுறான்? அவனுக்கு தான் அவளை பிடிக்கலையே? அப்படியே ஹரினியோட பிக்கப் பண்ணிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தானே :)
//Hello Sir!! என்ன
மறந்தாச்சா???//
யப்பா கணேசா...என்னய்யா நடக்குது இங்க. அவ்வ்வ்வ்வ்
Ganesh,
Unnoda kaatla nalla puyal malai veesudhu da:)
கடைசியில் 'ஜீன்ஸ் போட்ட மஹாலெட்சுமி' தான் ஜெயித்தாள்.
-Guess panna mathiri Shyamala pakkam than saaiva pola!
Ganesh.. chance ae illa... Harini's introduction and shyamala's reaction :) i loved it and enjoyed.. simply superb!!! ungaluku neraya experience irukum pola iruke.. ;)
நன்றாக உள்ளது. தொடருங்கள்..
நன்றி Shalini!
ஹி... ஹி... ஹி... //
அது உண்மை. இந்த முழுகதையிலயும் இந்த இடத்துல மட்டும் ஏன் இப்படி சிரிக்கிறீங்க! கொலைவெறி கும்பல் :(
Hello Sir!! என்ன மறந்தாச்சா???//
அவ்வ்வ்.. பதிவை விட உங்க கமெண்ட்ஸ் தான் பட்டாசா இருக்கு. என்ன ரிப்ளை பண்றதுன்னே தெரியல :(
***********
நன்றி மணி!
நிஜங்களை வச்சு கதை எழுதுறாரோ ஷாலினி சண்டைக்கு வருகிறார்,//
சத்தியமாக இது புனைவு தாங்க.. கண்ணால் காண்பதும் பொய், கமெண்ட்ஸூம் பொய். தீர விசாரிப்பதே மெய் :(
**********
நன்றி சின்ன அம்மிணி!
இப்படி சீக்கிரமே சஸ்பென்ஸை உடைச்சிட்டீங்களே!!! //
அப்படின்னா இத விட சஸ்பென்ஸ் எல்லாம் இன்னும் இருக்குன்னு அர்த்தம் :) :) :)
கொள்ளிவாய்ப்பிசாசுங்க அது//
கரெக்ட்ங்க.. மாத்திடுறேன். தேங்க்ஸ் :)
**********
நன்றி ☀நான் ஆதவன்☀
வாட்!!! அப்ப கதை முடிய போகுதா?// இல்லையே :)
கணேஷ் ஏன் சியாமளாவைப் பார்த்து பயப்படுறான்? அவனுக்கு தான் அவளை பிடிக்கலையே? அப்படியே ஹரினியோட பிக்கப் பண்ணிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தானே :)//
கணேஷூக்கு சியாமளாவப் பிடிக்கலன்னு யார் சொன்னது? (அது போன வாரம். இது இந்த வாரம்) இந்த பதிவில், "ஜீன்ஸ் போட்ட மஹாலெட்சுமி"யை தேடவும் :) :) :)
யப்பா கணேசா...என்னய்யா நடக்குது இங்க. அவ்வ்வ்வ்வ்//
சத்தியமா தெரியலீங்க.. ஏதோ ஒரு பையன், ஷாலினி பேர்ல கமெண்ட் போட்டு எங்கூட விளையாடிக்கிட்டு இருக்கார். யார்ன்னு தான் தெரியல :(
************
நன்றி Shankar!
Ganesh,
Unnoda kaatla nalla puyal malai veesudhu da:)//
அது புயல் மழை இல்லடா. பேய் மழை! எப்படி தான் கணேஷ் சமாளிக்கப் போறானோ?
-Guess panna mathiri Shyamala pakkam than saaiva pola!//
கணேஷ்க்கு எப்பவும் சியாமளா தான் :) நீயுமா, இந்த கதையில வர்ற கணேஷ் நான்தான்னு நினைச்சிகிட்டு இருக்க? :( என்ன கொடுமை ஷங்கர் இது?
**********
நன்றி guru!
Ganesh.. chance ae illa... Harini's introduction and shyamala's reaction :) i loved it and enjoyed.. simply superb!!! ungaluku neraya experience irukum pola iruke.. ;)//
ரொம்ப தேங்க்ஸ் உங்க பாராட்டுக்கு. ஆனா சொல்லி வச்ச மாதிரி ஏன் எல்லாரும் அதே கேள்வியக் கேக்குறீங்க :( :(
**********
நன்றி Anbarasu Selvarasu!
நன்றாக உள்ளது. தொடருங்கள்..//
நீங்க தான் உண்மைய சொல்லி இருக்கீங்க :)
**********
why no comments from Harini and Shyamala..... :)
Nice story. Keep it up.
Anonymous said...
why no comments from Harini and Shyamala..... :)
---------------
Good question. So Ganesh where are they? ;)
yov, nee kathai solli saagadichchiduv apoliye..
un kathaiya padichchu sirichchu,
Ennoda P.M.kitta naan maatikkittaenya..
Story super..
நன்றி Anonymous!
why no comments from Harini and Shyamala..... :)//
அண்ணே, என்கிட்ட போய் கேட்குறீங்களே.. இது ஒரு கற்பனைக்கதை. நான் ஒரு வேளை பேய்கதை எழுதினால், ஏன் பேய் கமெண்ட் போடவில்லை என்று கேட்பீர்கள் போல.. எப்படியெல்லாம் கொஸ்டின் கேட்குறாய்ங்கப்பா.. :) :)
***************
நன்றி நாடோடிப் பையன்!
Nice story. Keep it up.//
தேங்க்ஸ்ங்ண்ணா..
***************
நன்றி nsrajesh!
Anonymous said...
why no comments from Harini and Shyamala..... :)------------
Good question. So Ganesh where are they? ;)//
ஸ்ஸப்பா முடியல.. ஆமா பாஸ், நான் தான் அவங்கள ஒளிச்சி வச்சிக்கிட்டு, கமெண்ட் போடக்கூடாதுன்னு சொல்லிட்டேன். சந்தோசமா இப்ப? எப்படியெல்லாம் கொஸ்டின் கேட்குறாய்ங்கப்பா.. ஒரு முடிவோட தான் எல்லாரும் இருக்கீங்க :) :):) :) :)
****************
நன்றீ Nisha
yov, nee kathai solli saagadichchiduv apoliye..//
நீங்க ரொம்ப மரியாதை தெரிஞ்ச பொண்ணா இருக்கீங்க. குட். :)
un kathaiya padichchu sirichchu,
Ennoda P.M.kitta naan maatikkittaenya..//
:)
Story super..//
இத சொல்றதுக்கு, எப்படியெல்லாம் பேசிட்டீங்க :) :)
***********
கதை நல்லா போகுது, கணேஷ்
கணேஷ்.. சரியான லைனை பிடிச்சிருக்கீங்க.. இன்ட்ரஸ்டிங்..
Konjam unarchchi vasappattutenpa.. soory. naan vaanguna dose appudi..:)
keep rocking.. :)
நன்றி சரவணகுமரன்!
கதை நல்லா போகுது, கணேஷ்//
மறுபடியும் நன்றி சரவணகுமரன்!
**************
நன்றி Cable Sankar!
கணேஷ்.. சரியான லைனை பிடிச்சிருக்கீங்க.. இன்ட்ரஸ்டிங்..//
உங்களின் பாராட்டு, மனதுக்கு நிறைவாக இருக்கிறது. தேங்க்ஸ் :)
**************
நன்றி Nisha!
Konjam unarchchi vasappattutenpa.. soory. naan vaanguna dose appudi..:)//
இட்ஸ் ஓ.கே. இன்னும் நெறைய்ய டோஸ் வாங்கவும் :)
keep rocking.. :)//
தேங்க்ஸ் :)
**************
Post a Comment