இந்த 3 நாட்களில் வீட்டில் சரியான சாப்பாடு. வெள்ளிக்கிழமை மதியம் அம்மா வைத்த கத்திரிக்காய் சாம்பாரை அப்படியே சாப்பிடலாம் என்பது போல் இருந்த்து. இதில் அம்மா வேற "குழம்பில் உப்பு கொஞ்சம் கொறஞ்சிருச்சு, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்று சொன்னார்கள். அதெல்லாம் பராவாயில்லமா என்று நான் சொன்னாலும் எனக்கு தான் தெரியும் சாம்பார் எவ்வளவு அருமையாக இருக்கிறது என்று. ஏன் என்றால் பருப்பே எல்லாத சாம்பார், சாம்பார் பொடியே போடாத சாம்பார், காரம் அதிகம் என்று புளியையும், புளிப்பு அதிகம் என்று காரத்தை அதிகப்படுத்தி கடைசியில் கெமிஸ்டரி லேபில் கண்டுபிடிக்கும் Solution மாதிரி சாம்பார் என பல varieties நான் சாப்பிட்டிருக்கிறேன். அதெல்லாம் நானே சமைத்தது (பெருமையாக வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத சாதனை)அமெரிக்காவில் இருந்த போது. செய்முறை விளக்கம் எல்லாம் தெரியாமல் குருட்டு நம்பிக்கையில் சமைத்தவை. மூன்று வேளையும் நீங்கள் சாதம் சாப்பிட்டு இருக்கிறீர்களா?? நான் அங்கு இருந்த போது அதை மட்டும் தான் சாப்பிட்டேன்.
அதை எல்லாம் அம்மாவிடம் சொல்லாமல் (பின்னே, சாதனை என்றால் சொல்லலாம்), வழக்கம்போல் அவர்கள் நேற்று சமைத்த சிக்கன், இன்று மீன் என்று தினமும் ஒரு பிடி பிடித்துக் கொண்டிருக்கிறேன்.
இன்னும் ரெண்டு நாள் நல்லா சாப்பிட்டு விட்டு செவ்வாய்க்கிழமை இரவு பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்ஸைப் பிடிக்க வேண்டும். மீண்டும் சென்னையில் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது இப்போதே அம்மா சாப்பாட்டை நன்றாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தானாக தோன்றி மறைகிறது.
***************************
பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு கணிசமான விலை குறைத்திருக்கிறார்கள். இருந்தாலும் இன்னும் 5 ரூபாய் ஒரு லிட்டர் பெட்ரோலுக்குக் குறைக்கலாம் என்று TimesNow ஆதாரத்துடன் நிரூபிக்கிறது. இனிமேல் ஆட்டோக்காரர்கள் என்ன காரணம் சொல்லி தலையை சொறிவார்கள் என்று தெரியவில்லை. விலை குறைந்த இந்த சமயத்திலும் அவர்கள் மட்டும் வாடகையைக் குறைக்கமாட்டர்கள். அவர்கள் அப்படி குறைத்தால் ஃபோட்டோவுடன் கின்னஸ் சாதனைக்கு அனுப்பலாம்.
அம்மா சமையல், பெட்ரோல் விலை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment