நெருங்கிய சொந்தத்துக்குள் திருமணம் செய்து வைத்தால் பிறக்கும் குழந்தைக்கு ரத்தம் சம்பத்தப்பட்ட நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்ற அறிவியல் உண்மையை தமிழ் கூறும் நல்லுலகிற்கு சொல்ல முயற்சி செய்துள்ள படம்.
தன் தாய்மாமன் தங்கராசுவை திருமணம் செய்வது தான் தன் வாழ்நாள் இலட்சியமாக வைத்துக் கொண்டு வாழும் பெண் மாரியாக புதுமுகம் பார்வதி. "உன் மாமனை அம்புட்டு பிடிக்குமோ" என்று கேள்விக்கு "அம்புட்டு இல்ல இம்புட்டு" என்று கையை விரித்து பதில் சொல்லும் காட்சியில் எக்ஸ்பிரஷனில் பின்னுகிறார் பார்வதி. சிவகாசி பக்கத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் வெடியாபிஸில் வேலை செய்கிறார். ஆனால் மாரியை பற்றிக் கொஞ்சம் கூட நினைக்காமல் இன்ஞ்சினியரிங் படிக்கும் மாணவனாக ஸ்ரீகாந்த். சொல்லப் போனால் இவருக்குப் படத்தில் வேலையே இல்லை. பார்வதியின் கணவராக "சென்னை 28" ல் Rockers டீம் கேப்டனாக வரும் இனிகோ. இவருக்கும் பார்வதிக்கும் முதல் பாடலில் அருமையான கெமிஸ்டரி.
ஸ்ரீகாந்தை தவிர படத்தில் நடித்த மற்ற அனைவரும் நடிப்பில் பட்டையைக் கிளப்பி உள்ளனர். ஸ்ரீகாந்தின் அப்பாவாக வரும் பேனாக்காரர், அக்மார்க் கிராமத்துத் தமிழர். இவரை அனைவரும் பேனாக்காரரே என்று அழைக்கும் போது இவர் முகத்தில் காட்டும் ரியாக் ஷன் சூப்பர். அதே போல் பார்வதியின் அம்மாவாக வரும் பெண்ணின் பேச்சில் அப்படியே ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார பேச்சு. பார்வதியின் அண்ணனாக வருபவர்(வீரசமர்) படத்தின் ஆர்ட் டைரக்டரும் கூட.
சின்மயி குரலில் "ஆவாரம் பூ" பாடல் தீம் மியூசிக்காக உருகுகிறது. அதே போல் "சூ சூ மாரி", "மாமன் எங்கே இருக்கான்" பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் அருமையாக உள்ளன. சூ சூ மாரியில் வரும் ஒரு சிறுவன் கேமரா முன்னால் நின்று கொண்டு பண்ணும் குறும்பு ரசிக்கும்படி உள்ளது. ஆனால் பரவை முனியம்மா வரும் "சிவகாசி ரதியே" பாடல் அப்படியே "திமிரு" படத்தில் வடிவேல் ஆடும் "அடங்கொப்புரானே" பாடலின் அட்டகாசமான காப்பி(பேஸ்ட்).
கல்யாணத்துக்கு அப்புறம் எங்கே சோகமாகவோ, அழுதாலோ மாமனுக்கு சுகமில்லாமல் போய்விடுமோ என்று எப்பவும் சிரித்துக் கொண்டே (நடுக் காலில் ஒரு கிலோ படிக்கல் விழும்போதும் ஈ என்று சிரிக்கிறார்)திரியும் பார்வதி, மாமன் வாழ்க்கை அவருடைய கல்யாணத்துக்கு அப்புறம் சந்தோஷமாக இல்லை என்று தெரிந்தவுடன் பொட்டல் காட்டின் நடுவே உக்கார்ந்து ஓவென்று அழுவது நெஞ்சை ஏதோ செய்கிறது. இது தான் டைரக்டர் டச்.
படத்தின் இரண்டரை மணி நேரத்தில் இரண்டு மணிநேரம் பார்வதியை மட்டும் காட்டிக் கொண்டிருப்பது ஒரு வகை அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. சீக்கிரம் அவங்க ரெண்டு பேரையும் சேத்து வைங்கப்பா என்று புலம்ப வைக்கிறார்கள். அப்புறம் தேவையே இல்லாத கொய்யாப்பழ ஷாட், கவனத்துடன் தவிர்த்து இருக்கலாம்.
பூ-ஏமாற்றமளிக்காத கள்ளிப் பூ.
பூ - திரை விமர்சனம்
Labels:
திரை விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
லாஸ்ட் பஞ்ச் லைன் சூப்பர்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி லக்கிலுக் சார்...
silaperu padam nalla irukkunnu solranga ungala pola silaperu nalaa illannu solranga
//silaperu padam nalla irukkunnu solranga ungala pola silaperu nalaa illannu solranga//
நான் படம் நல்லா இல்லைன்னு சொல்ல வரல shabi.. சில நேரம் மட்டும் பொறுமையை சோதிக்கிறார்கள். மற்றபடி, தமிழ் சினிமாவின் தரமான படங்களின் பட்டியலில் பூவுக்கும் நிச்சயம் இடம் உண்டு..
Post a Comment