கணேஷ்-சியாமளா தொடர் எழுதுவேன் என்று நான் ஆரம்பத்தில் நினைக்கவில்லை. முதல் மூன்று எபிசோட்களை தனித்தனி சிறுகதைகளாகத் தான் நினைத்து வைத்திருந்தேன். மூன்றையும் கொஞ்சம் ஆர்டர் மாற்றி, கேரக்டர்களுக்கு பெயர் ஒன்றாக மெயின்டெயின் பண்ணியபோது, படிப்பவர்கள் இவ்வளவு துள்ளலுடன் படித்து, கமெண்ட் போடுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் முதன்முதலில் தொடர்ச்சியாக இவ்வளவு அதிகமான கமெண்ட்ஸ் வாங்குவது இது தான் முதல் தடவை. 21 எபிசோடும் தமிழீஷில் பாப்புலர். "ganesh shyamla" என்ற கூகிள் ஸர்ச் மூலம் வந்தவர்கள் 2000 பேருக்கும் மேல். இந்த தொடரை நான் ஆரம்பித்தபோது 48 பேருடன் தள்ளாடிக் கொண்டிருந்த என் ஃபாலோயர்ஸ் கேட்ஜட், இப்போது செஞ்சுரி தாண்டி 121 என ஓடிக் கொண்டிருக்கிறது. சின்ன அம்மிணி, நான் ஆதவன், புதுவை சிவா, பொற்கொடி, ஷங்கர், குட்டி, காம்ப்ளான் சூர்யா என நிறைய நல்ல மக்கள் ரெகுலர் ரீடர்ஸ்களாக கிடைத்துவிட்டனர். அவர்களுக்கு நன்றி.
இதைத் தவிர மொத்த 21 எபிசோட்களையும் சைலண்ட் ரீடராக படித்து, க்ளைமேக்ஸ் போஸ்ட்டில் கமெண்ட் போட்டவர்களும் உண்டு, தனி இமெயில் அனுப்பி என்னை உருக வைத்த வாசகர்களும் உண்டு. "ச்சே, இந்த உலகம் என்கிட்ட எவ்வளவு எதிர்பார்க்காது தெரியாமலே நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்னு தோணுச்சி"
கேபிள் ஷங்கரிடம் இரண்டு முறை பதிவர் சந்திப்பில் பேசி இருக்கிறேன். என் ப்ளாக் யூஆர்எல் கூட அவருக்கு சரியாக நியாபகம் இருக்காது என நினைக்கிறேன். இந்த தொடர் ஆரம்பித்தவுடன் என்னை செல்ஃபோனில் அழைத்துப்பேசி, "ஸ்டோரி ரொம்ப நல்லா போகுது கணேஷ், அதை அப்படி பண்ணியிருக்கலாமோ?" என ச்சின்ன சின்ன கரெக்சன்ஸ் கொடுத்து என்னை ரொம்ப உற்சாகப்படுத்தினார். "என்ன சட்டுன்னு முடிச்சீட்டீங்க.. இங்கே தானே ஆக்சுவலா ஸ்டோரி ஆரம்பிச்சி இருக்கணும். மிஸ் பண்ணிட்டீங்க கணேஷ்?" என நான் தொடரை முடித்தவுடன் அவர் அழைத்து சொன்னபோதுதான், அவர் சொன்ன விஷயங்கள் எனக்கு புரிய ஆரம்பித்தது. அவர் மீது மரியாதை இன்னும் அதிகமாகியது. தேங்க் யூ ஸார் :)
அதற்குபின் ஒரு விஷயம்... மூன்று எபிசோடுகளுக்கு பின் இந்த தொடரை எப்படி எடுத்துசெல்வது என ஏகக் குழப்பம். அப்போது தான் பதிவர் ராஜலட்சுமி அவர்களுடன் "சாட்"டிக் கொண்டிருக்கும்போது என்னை சிறுகதை எழுதுவதற்கு சொன்ன ஒன்லைன், "நமக்கு பிடித்தவர்களை விட, நம்மை பிடித்தவர்களால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்". இந்த ஒன்லைனை வச்சி நாம ஏன் தொடர்கதை எழுதக் கூடாது என விட்டத்தை பார்த்து யோசித்தபோது தான் உள்ளே வந்தாள் திவ்யா. அந்த knot உள்ளே வந்தவுடன் ஆன்சைட், காலேஜ் லவ், ஹையர் ஸ்டடீஸ் என நிறைய விஷயங்கள் தானாக உள்ளே வர ஆரம்பித்தன. 21 எபிசோட் வரைக்கும் வந்தாச்சி. ஸோ, Thanks to Raji tooooooo :)
போனாபோகுதுன்னு ஹீரோவுக்கு கணேஷ்ன்னு என் பேரை வச்சேன். எல்லாரும் வார்த்தை மாறாம கேக்குற ஒரே கேள்வி.. "யாரு சியாமளா? யாரு திவ்யா?" தெரியாதவங்க, வாசகர்கள் கேக்குறாங்கன்னா, ஓ.கே பரவாயில்ல.. ஆனா ஆஃபிஸ்ல கூட வேலை பாக்குறவங்க, "யாரு சியாமளா?"ன்னு கேட்டா "நான் என்ன்ன்ன்ன்ன்ன்ன பண்ணுவேன்?" சொல்லுங்க... அதே மாதிரி என் காலேஜ் ஃப்ரண்ட்ஸும் "யாருடா திவ்யா?"ன்னு வேற கேக்குறாய்ய்ங்க.. Grrrrrrrrrrrrrrrrrர் :(
தென்.. இந்த வேலன்டன்ஸ்டேக்கு எல்லாரும் கவிதை, கதைன்னு புரட்சி பண்ணிக்கிட்டு இருக்கும்போது எதுவும் ட்ரை பண்ணாம இருக்கியேடான்னு, கனவுல வேலன்டைன் கத்தி எடுத்துட்டு விரட்டுறாரு என்னங்க பண்ணுறது?
எல்லாருக்கும் ஒரு ரிக்வெஸ்ட். கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் பெர்சனல் வேலைகள் என்னை பாடாய்படுத்துவதால், ஒரு ஷார்ட் ப்ரேக் எடுக்கலாம்ன்னு இருக்கேன். சீக்கிரம் வந்துடுவேன். சீக்கிரம் இன்னொரு தொடர்கூட ஆரம்பிக்கலாம் :) So Stay tuned!!!!!
'காதல்'ல்ல இருக்குறவங்களுக்கும், என்னை மாதிரி 'காதல்'லை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும், HAPPY Valentine's Day!!!!!!!!!!!!!(சாமி சத்தியமா, அந்த ச்சின்னப்பையன் நான் இல்லைங்க)
****************************
கணேஷ்-சியாமளா! சில நன்றிகள்
Labels:
கணேஷ்-சியாமளா,
நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
:-))
பாராட்டுகள் கணேஷ்.
முதல்ல தொடர்கதைய எழுதவே ஒரு தைரியம் வேணும். அதுவும் இவ்வளவு சுவாரஸியமா எழுத திறமையும் வேணும். எங்களால முடியாதத இன்னொருத்தர் அழகா செய்யும் போது ஏற்படுற சந்தோஷம் தான் நாங்க கொடுத்த ஆரவாரம். அந்த ஆரவாரத்துல நீங்க இன்னும் அழகா மெருகேறி கதைய நல்ல கொண்டுபோனீங்க :)
காதலர் தின வாழ்த்துகள் கணேஷ். சீக்கிரம் ஜோடிபுறா(சியாமளா) கிடைக்க வாழ்த்துகள் :)
அது..,
ஒரு அழகிய நிலாக்காலம் கனவுகள் நிரம்பிய கனாக்கோலம்..,
//கொஞ்சம் பெர்சனல் வேலைகள் என்னை பாடாய்படுத்துவதால், ஒரு ஷார்ட் ப்ரேக் எடுக்கலாம்ன்னு இருக்கேன். சீக்கிரம் வந்துடுவேன்//
khi khi khi.. enna velai nu engluku theriyadhakum? nadathunga boss!
palamai pesi padivil yittathu....
udambu valaiyatha 8 maninera velai, atharkku mel oeru vinadi pani seithal atharkku yirandu madangu kooli, varathil nangu nattkal mattum velai, thangumidam martrum velaiyidathil midamana seyarkai thatpa veppam, gana nimida dhorathil cafe breakarea and Mc D'. vuyartara pathukappudan koodiya apartment or town house ll kudumbam marrum makkal. thodu dhoorathil bank, utility, online shopping, nanbarkal, movie, songs, games marrum pannattu tholaipesi through high speed internet yenum indiralogam. adivega rail, sogusana car, malivu vilaiyil petrol (gas), anaithu porutkalum nalla deal lil. ellavatrukkum mel sambadhikkum 1 dollarukku kurainthathu 45 rubai yindhiya madhippu (madam 8500 dollar sambalam padivulakukko ellai nanbarkalukko solla vendiya avasiyam ellai :-)).
piranthathu kongu Tamil nattin kukgiramam, tharpothu manaivi makkaludan vasippathu America yenum sorgapuri, Surplus nerathai selavida mattum TAMIL, TamilPadivu (Bothanai :-))
200 rubai erunthal nangu nattkal arai vayirrtudan kadanthuvida ninaikku Unmai Tamila (Truetamilans) un nilai enna? Dharapuratthan.. ethai kavanikka koodatho..
Nanum America thaan... sikako...
கணேஷ்-சியாமளா ரொம்ப நல்லாயிருந்துது. அடுத்த தொடர் ஆரம்பியுங்க சீக்கிரம்.
//ஓடிக் கொண்டிருக்கிறது.ன அம்மிணி, நான் ஆதவன், புதுவை சிவா, பொற்கொடி, ஷங்கர், குட்டி,//
என்னோட பாதிப்பெயர் காணோம். பரவாயில்லை. அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்.
ஆமாம் அந்த டீனேஜ் தொடர் பதிவு என்னாச்சு.
//"என்ன சட்டுன்னு முடிச்சீட்டீங்க.. இங்கே தானே ஆக்சுவலா ஸ்டோரி ஆரம்பிச்சி இருக்கணும். //
அடுத்த தொடர் இதை வைத்து ஆரம்பிப்பீங்கன்னு நம்பரோம்.
எனக்கு இன்னும் அனுப்பல.. :)
வாழ்த்துக்கள் உங்க தொடர்கதை வெற்றிக்கு.
Hmm,
Great Ganesh,
Innum Neriya eluthunga...
Rumba nalla AlaKanumeynu konjam Varuthama kooda erunthchu..bt Padivu enbathaivida valkainu oru orutharuku erukum..so athium konjam paka poi erukalam apdinu ninithukonden..
Nandrigal to Mention My Name also in your thanks list..am just nothing.You and like big big great bloggers are here..i have to thanks to all
Good end with New Start of your Life as well as your great blogs.
Take Care of you,
C u again.
Valga VAlamudan.
(v.v.s Groups..)
athanga Varuthapadtha Valibar Sangam...)
life is beautiful and also to meet such a great peoples like you.
Thank you.
கணேஷ் காதலர் தின வாழ்த்துகள் !
"சாமி சத்தியமா, அந்த ச்சின்னப்பையன் நான் இல்லைங்க"
நம்பிட்டோம்.
அந்த குட்டி பையன் பேன்ட் இருந்து ஒரு பெல்ட் போட்டு இருக்கான் . இப்ப வளர்ந்த உடன் கழுத்துல ஆபிஸ் ஐ.டி யை மாட்டி இருக்கீங்க.
:-)))
ஆமா கணேஷ் எங்க? அந்த போட்டா?
நன்றி சரவணகுமரன்!
ரொம்ப நாள் ஆளையேக் காணோம் :(
*********************
நன்றி ☀நான் ஆதவன்☀
காதலர் தின வாழ்த்துகள் கணேஷ். சீக்கிரம் ஜோடிபுறா(சியாமளா) கிடைக்க வாழ்த்துகள் :)//
ஜோடிபுறா, அட இதுகூட நல்லா இருக்கே...
*********************
நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)!
ஒரு அழகிய நிலாக்காலம் கனவுகள் நிரம்பிய கனாக்கோலம்..,//
எது? கமெண்ட் போடுறதுக்கு ஆள்கிடைக்காம காற்று வாங்கிட்டு இருந்த நாட்களா?
*********************
நன்றி Porkodi (பொற்கொடி)
khi khi khi.. enna velai nu engluku theriyadhakum? nadathunga boss!//
கிர்ர்ர்ர்... இன்னுமா இந்த உலகம் என்னை நம்பிக்கிட்டு இருக்கு? :)
*********************
நன்றி Anonymous
நல்லா இருக்கு கமெண்ட்.. ஆனா இங்கே ஏன்?
*********************
நன்றி சின்ன அம்மிணி
என்னோட பாதிப்பெயர் காணோம். பரவாயில்லை. அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்.//
திருத்திட்டேன்.. ஸாரி :)
ஆமாம் அந்த டீனேஜ் தொடர் பதிவு என்னாச்சு.//
எனக்கு டீன் ஏஜ் முடிந்தவுடன் வரும் :)
அடுத்த தொடர் இதை வைத்து ஆரம்பிப்பீங்கன்னு நம்பரோம்.//
அட இது கூட நல்ல்லா இருக்கே.. பார்ப்போம் :)
*********************
நன்றி Cable Sankar!
எனக்கு இன்னும் அனுப்பல.. :)//
சீக்கிரம் அனுப்பிடறேங்க... :(
*********************
நன்றி Complan Surya!
பாசக்கார பயபுள்ள நீங்க :)
*********************
நன்றி ♠புதுவை சிவா♠
கணேஷ் காதலர் தின வாழ்த்துகள் !//
அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம் :)
ஆமா கணேஷ் எங்க? அந்த போட்டா?//
எந்த ஃபோட்டோ?
*********************
Great Ganesh... ellarum overu episoda padichaanga aana unga kathai enna 4-5 hrs la padika vachathu athuvum office works side by side...
Nice story... with lots of thrilling curves...
But where did that photo come from. Did Divya gave to Shymala? anga thaan konjam idikuthu... otherwise good ending...
Now I am also ur fan!!! ;-)
How long we have to wait for the next one?!!
;)
Sikram Yezhunthunga..
Post a Comment