ஆயிரத்தில் ஒருவன் - பாடல் விமர்சனம்

செல்வராகவனுக்கும், ஜி.வி.பிரகாஷுக்கும் நன்றிகள்.

ஒட்டு மொத்தமாக 10 பாடல்கள். மூன்று பாடல்களை வைரமுத்துவும், ஐந்து பாடல்களை செல்வராகவனும் எழுதியுள்ளனர். இரண்டு தீம் மியூசிக் பிட்ஸ். இரண்டு ரீமிக்ஸ் வெர்ஷன்ஸ்.

வைரமுத்துவின் 7ஆம் நூற்றாண்டு காலத்து சோழப்பேரரசு சம்பந்தப்பட்ட பாடல்களில் அட்சர சுத்தமான தமிழின் உக்கிர வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்வ‌ராக‌வன் வ‌ழ‌க்க‌மான‌ காத‌ல், ஃபீலிங்க்ஸ் கலந்து‌ பாட‌லாசிரியாக‌ மிக‌ச் சிற‌ப்பான‌ கிர‌வுண்ட் வொர்க் செய்துள்ளார்.

படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஆண்ட்ரியா நான்கு பாடல்கள் பாடியுள்ளார். இவர் ஏற்கெனவே, அந்நியனில் "கண்ணும் கண்ணு நோக்கியா", வேட்டையாடு விளையாடுவில் "கற்க கற்க" பாடலும் பாடியுள்ளார்.

1. தாய் தின்ற‌ ம‌ண்ணே(The cholan excstasy) ‍
பாடியவர்கள்:நித்யா ஸ்ரீம‌காதேவ‌ன், விஜ‌ய் யேசுதாஸ், ஸ்ரீகிருஷ்ணா
எழுதிய‌வ‌ர்: வைர‌முத்து


எள்ள‌லான ந‌டையில் நித்ய‌ஸ்ரீ ஆர‌ம்பிக்கும் பாட‌ல், விஜ‌ய் யேசுதாஸின் வாய்ஸில் உயிரை உருக்குகிற‌து. இடைஇடையே சுந்த‌ர‌ தெலுங்கிலும், மலையாளத்திலும் சென்று ப‌ல‌ உச்ச‌ங்க‌ளை தொட்டு வ‌ருகிற‌து. மிருத‌ங்க‌மா, க‌ட‌மா என்று தெரிய‌வில்லை.. அத‌ன் ஆட்சி தான் பாட‌ல் முழுவ‌தும். திடீர்திடீரென்று அத‌ன் வேக‌த்தில் உள்ள‌த்தில் ஒரு வித‌ சோக‌த்தை ப‌ர‌வ‌ செய்கிற‌து. அதுவும் முக்கிய‌மாக

"புலிக்கொடி பொறித்த சோழமாந்தர்கள்
எலிக்கறி கொறிப்பதுவோ? "

செல்லும்போது அதிர்கிற‌து. இதாவ‌து ப‌ர‌வாயில்லை,

"மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ"

வ‌ரிக‌ளில் வைர‌முத்துவின் பேனா ஈழ‌ அவ‌ல‌த்தை குறிவைத்து கொட்டியுள்ள‌து.

இத‌ன் ஒரிஜின‌ல் வெர்ஷ‌னில்(தாய் தின்ற‌ ம‌ண்ணே Classical Version), விஜ‌ய் யேசுதாஸ் ம‌ட்டுமே. தெலுங்குமில்லை. ம‌லையாள‌மும் இல்லை. ஒன்லி சோழ‌ப் பேர‌ர‌ச‌னின் புல‌ம்ப‌ல்க‌ளை ம‌ட்டும் ந‌ம் காதுக‌ளுக்கு க‌ண்ணீருட‌ன் அனுப்புகிறார்க‌ள்.

2. பெம்மானே
பாடிய‌வ‌ர்க‌ள்: பாம்பே ஜெய‌ஸ்ரீ, P.B.சீனிவாஸ்
எழுதிய‌வ‌ர்: வைர‌முத்து


யானையின் பிளிர‌லுட‌ன் ஆர‌ம்பிக்கும் பாட்டை, கேட்டு முடிக்கும்போது "ஏண்டா இந்த‌ பாட்டை கேட்டோம்" என்று குற்ற‌ உண‌ர்ச்சியின் உச்சத்தில் ச‌ல‌ம்புவ‌து நிச்ச‌ய‌ம். என‌க்கு க‌ண்ணீரே வ‌ந்துவிட்ட‌து. காட்ட‌மான‌ வ‌ரிக‌ள்.

சோறில்லை சொட்டுமழை நீரில்லை
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே
மூப்பானோம் முன்வளைந்து முடமானோம்
மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே


என‌க்கு ச‌த்தியமாக‌ ஒரு ஈழ‌த்த‌மிழ‌னின் க‌ண்ணீர் குமுற‌லின் ப‌திவாக‌ ம‌ட்டுமே, இந்த‌ பாட‌ல் தெரிகிற‌து. ந‌டுந‌டுவே வ‌ரும் த‌ஞ்சை, ப‌ழ‌ம்த‌ஞ்சை,புக‌ழ்த‌ஞ்சை வார்த்தைக‌ளுக்கு ப‌திலாக‌ ஈழ‌ம் என்று நிர‌ப்பினால் சால‌ பொருந்தும். உருகி உருகி காத‌லின் ஏக்க‌த்தை ம‌ட்டுமே ப‌திவு செய்த‌ பாம்பே ஜெய‌ஸ்ரீயின் குர‌ல், இந்த‌ பாட‌லில் அழுது, ந‌ம்மையும் அழ‌ வைக்கிற‌து. P.B.சீனிவாஸ் பாட‌லை முடிக்கும் போது நெஞ்ச‌ம் க‌ன‌க்கிற‌து.

3. மாலை நேர‌ம்
பாடிய‌வ‌ர்க‌ள்: ஆண்ட்ரியா
எழுதியது: செல்வ‌ராக‌வ‌ன்

காத‌லி, காத‌ல‌னையும் காத‌லையும் காத‌லித்துக் கொண்டு பாடுவ‌து. இந்த‌ பாட‌லை பீச் ம‌ண‌லில் காதலியுடன் ஐபாடின் ஈய‌ர்பீஸ் ஆளுக்கொன்று வைத்துக் கொண்டு கைகோர்த்து, கால் மணலில் புதைய‌ ந‌ட‌ந்து சென்றால், அது தான் சொர்க்க‌ம். இதே மாதிரி கார்க்கியின் க‌த‌ற‌ல்க‌ளை இங்கே சென்று பாருங்க‌ள். பேச்சில‌ர் ப‌ச‌ங்க‌ளை கெடுப்ப‌த‌ற்கே இந்த‌ பாட‌ல். உட‌னே ஒரு கேர்ள்ஃப்ர‌ண்ட் தேட‌வேண்டும், இந்த‌ பாட‌லை கொண்டாடுவ‌த‌ற்கு. இதை மிஸ் ப‌ண்ணினால், நேரே ந‌ர‌க‌த்திற்கு செல்ல‌க்க‌ட‌வ‌து.

4. உன்மேலே ஆசதான்
பாடிய‌வ‌ர்க‌ள்: த‌னுஷ், ஐஸ்வ‌ர்யா த‌னுஷ், ஆண்ட்ரியா
எழுதிய‌து: செல்வ‌ராக‌வ‌ன்

த‌னுஷ் ரொம்ப‌ மென‌க்கெடாம‌ல் ஜ‌ஸ்ட் லைக் த‌ட் என‌ சிற‌ப்பாக‌ பாடிய‌ பாட‌ல். அவ‌ரின் ம‌னைவியும், ஆண்ட்ரியாவும் கோர‌ஸ். அவர்களின் வேலை, தனுஷ் பாடி முடித்தவுடன் "ஆனது ஆகட்டும் Don't care baby. போனது போகட்டும் leave that baby" மட்டுமே. இதுவும் நன்றாகத் தான் உள்ளது. செல்வராக‌வ‌ன் லிரிக்ஸில் விளையாடியுள்ளார். வாழ்க. ஒரு சாம்பிள்.

"என் எதிரே ரெண்டு பாப்பா
கைவ‌ச்சா என்ன‌ த‌ப்பா"


5. இந்த‌ பாதை
பாடிய‌வ‌ர்: ஜி.வி.பிர‌காஷ்
எழுதிய‌து: செல்வராக‌வ‌ன்

ரொம்ப‌ ஆர்பாட்ட‌மே இல்லாம‌ல், ஸோலாவாக‌ ஜி.வி.பிரகாஷ் குர‌ல் ம‌ட்டும் இழைகிற‌து. மிகவும் மைல்டான இசை. இவ‌ர் வாய்ஸும் ந‌ன்றாக‌ உள்ள‌து. ஏ.ஆர்.ரகுமான், யுவ‌ன் போல‌ இவ‌ரும் த‌னியாக‌ பாட‌ ஆர‌ம்பிக்கலாம்.எதையே தேடிக் கொண்டு அலையும் இளைஞ‌னின் தேட‌லாக‌ இந்த‌ பாட‌ல் விரிகிற‌து. கேட்க‌ கேட்க இந்த‌ பாட‌ல் பிடித்து போக‌ வாய்ப்பு இருக்கிற‌து.

6. ஓ ஈசா
பாடிய‌வ‌ர்க‌ள்: கார்த்திக், ஆண்ட்ரியா
எழுதியது: செல்வ‌ராகவ‌ன்

ஏதோ ப‌ப்பில் ஓடும் பாட‌ல் போல‌ இருக்கும் ப‌க்தி பாட‌ல். "கோவிந்த்தா, கோவிந்தா" என்று கோர‌ஸில் இழுக்கும் இழுப்புக்கு இந்துத்வாக்கார‌ர்க‌ள் ச‌ண்டைக்கு வ‌ந்தாலும் வ‌ருவார்க‌ள். அட்ட‌காச‌மான இசை. பெர்குஷ‌ன்ஸ் ம‌ற்றும் கித்தாரின் அதிர‌டி ஃப்யூஷ‌னில் மிக்ஸ் ஆகி அதிர்கிற‌து. கால்க‌ள் ஆட்டோமேடிக்கா டான்ஸ் ஆட‌ அலைகிற‌து.

இத‌ன் இன்னொரு வெர்ஷ‌னும் உண்டு. அது இதை விட‌ அதிக‌ வைப்ரேஷ‌ன்.

இந்த‌ ஆறு முழுநீள‌ பாட‌ல்கள் த‌விர‌ இர‌ண்டு தீம்மியூசிக் பிட்ஸ் வேறு உண்டு. "The King arrives", "Celebration of Life" என‌ இர‌ண்டு பிட்ஸ். ஏகப்பட்ட வேரியேஷன்ஸ். இர‌ண்டும் அருமையாக‌ உள்ள‌ன‌. இந்த‌ ஆல்ப‌த்திற்கு இசைய‌மைக்காம‌ல் போன‌த‌ற்கு யுவ‌ன்ஷ‌ங்க‌ர் ராஜா குப்புற‌ப்ப‌டுத்து அழுவார்.

சீக்கிர‌ம் ப‌ட‌த்தை ரிலீஸ் ப‌ண்ணுங்க‌ பாஸ்!

******************************

9 comments:

அன்பேசிவம் said...

நண்பா அருமையான விமர்சனம், இதுதான் நான் படிக்கும் உங்களின் முதல் பதிவு, அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

அன்பேசிவம் said...

நண்பா! இந்த படத்தின் "உன்மேல ஆசைதான்" பாடலும் சர்வத்தின் "அடடா வா! அசத்தலாம்" ரெண்டும் ஒரே மெட்டு இல்லையா! இதை கார்க்கியிடமும் கேட்டிருக்கிறேன்.

கே.என்.சிவராமன் said...

அனுபவிச்சு எழுதியிருக்கீங்க நண்பா :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வெண்பூ said...

என்னய்யா இது, ஆளாளுக்கு இப்படி புகழுறீங்க.. பாட்டை கேட்டுட்டு வெச்சிக்கிறேன்..

மகேஷ் : ரசிகன் said...

என்ன மச்சி? ரொம்ப நாளா ஆளையே காணோம்?

விமர்சனம் நல்லா இருக்கு, எனக்கும் பாடல்கள் ரொம்ப புடிச்சிருக்கு.

Anonymous said...

இந்த‌ ஆல்ப‌த்திற்கு இசைய‌மைக்காம‌ல் போன‌த‌ற்கு யுவ‌ன்ஷ‌ங்க‌ர் ராஜா குப்புற‌ப்ப‌டுத்து அழுவார்

why yuvan shd cry? he escapd frm this flop movie.

cheena (சீனா) said...

பாடல்கள் அனைத்துமே கேட்டு ரசீச்சு அனுபவிச்சு விமர்சனமா - தூள்

thamizhparavai said...

பாடல்கள் கேட்டேன். நன்றாக இருந்தது,.விமர்சனமும் அருமை..
//இந்த‌ ஆல்ப‌த்திற்கு இசைய‌மைக்காம‌ல் போன‌த‌ற்கு யுவ‌ன்ஷ‌ங்க‌ர் ராஜா குப்புற‌ப்ப‌டுத்து அழுவார்.//
இந்த வரியைத் தவிர...யுவன் இருந்திருந்தால் இதைவிட குறைந்தது 0.01% அதிகம் பெட்டர் கொடுத்திருப்பார்.
‘உன் மேல ஆசைதான்’ பாடலை செல்வா உபயோகிக்கும் போதே இது தெரிந்திருக்க வேண்டும்.
மற்றபடி ஜி.வி.பிரகாஷ் நன்றாக செய்துள்ளார்.
‘தாய் தின்ற மண்ணே’ பாடல் ஒரு ஒட்டுமொத்த டீம் ஒர்க். பாடலை நன்றாகக் கேட்டு விட்டு யோசித்துப் பாருங்கள்...எல்லாவற்றையும் பின்னூட்டத்தில் சொல்ல விரும்பவில்லை...

Sakthi said...

awesome songs..

Related Posts with Thumbnails