மிகவும் அயர்ச்சியான தருணங்கள்!

மூன்று மணிநேர ஸ்டாண்டிங்கில், திடீரென்று ஒரு ஸ்டாப்பில் எழுந்த ஒருவரின் சீட்டில் உட்கார்ந்து உஸ்ஸென்று மூச்சுவிடும்போது, ஏக்கத்துடன் கைக்குழந்தையுடன் ஒரு தாய் நின்று கொண்டு பார்க்கும்போதும்...

அப்பாவிட‌ம் 1000 ரூபாய் வாங்கி பர்த்டே ட்ரீட் கொடுக்க வாங்கி ரெடியாக இருக்கும்போது, க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாரும் விஷ் கூட ப‌ண்ணாமல் இருக்கும்போதும்....

ரொம்ப‌ த்ரில்லிங்கான‌ நாவ‌லின் க்ளைமேக்ஸ் க‌டைசி ப‌க்கத்திற்கு ஆவலோடு திருப்பும்போது அதை யாரோ கிழித்து இருக்கும் போதும்.....

கெட்ட‌ ப‌சியில் ஓப‌ன் ப‌ண்ணிய‌ த‌ல‌ப்பாக்க‌ட்டு பிரியாணி கெட்டுப் போய் சாப்பிட‌ முடியாம‌ல் இருக்கும்போதும்...

"மின்ன‌லே மாத‌வன்" மாதிரி ஃபிக‌ர் ப‌ர்த்டே அன்னைக்கு ஸ்பெஷ‌லா விஷ் ப‌ண்ண‌லாம் என்று ப்ளான் ப‌ண்ணும்போது, அன்று அவ‌ள் ப‌ர்த்டேவே இல்லை என‌ ப‌ல்பு வாங்கும்போதும்...

ஃபைன‌ல் மேட்ச் பார்க்க‌வேண்டும் என‌ லீவ் போட்டு உட்கார்ந்து இருக்கும்போது, க‌ரெக்ட்டா மேட்ச் ஸ்டார்ட் ப‌ண்ணுவ‌த‌ற்கு 5 நிமிட‌ம் முன்னால் ப‌வ‌ர் க‌ட் ஆகும்போதும்..

ரொம்ப‌ நாள் க‌ழிச்சி த‌ண்ணி அடிக்க‌லாம் என்று சரக்கு வாங்கி 12 மணிக்கு மேல் அடிக்க உட்காரும்போது, மிக்ஸ் பண்ண வாட்டர் பாக்கேட்டும், வீட்டில் தண்ணியும் இல்லாமல் இருக்கும்போதும்..

ப்ரோப்ப‌ஸ் ப‌ண்ண‌லாம் என்று இருந்த‌ "ஒரு த‌லை காத‌ல்" ஃபிக‌ர் த‌னியாக‌ கூப்பிட்டு மேரேஜ் இன்விடேஷ‌ன் கொடுக்கும்போதும்....

ர‌ஜினி ப‌ட‌த்தின் முத‌ல் நாள் முத‌ல் ஷோ ஆர்பாட்டத்துடன் போகும்போது, அது "பாபா", "குசேலனாக‌" இருக்கும்போதும்...

ஹை குவாலிட்டி 'அந்த' ப‌‌ட‌த்தை ஃப்ரெண்டிட‌ம் இருந்து உஷார் பண்ணி வாங்கி வ‌ந்து பார்க்க‌ப் போகும்போது, அந்த‌ டிவிடி மாறிப் போய் மொக்கை இங்க்லீஷ் ப‌ட‌ம் ஓடும்போதும்...

நைட் ஒரு ம‌ணிக்கு ப‌டித்து முடித்துவிட்டு, ரொம்ப ஆர்வமாக ஒரே ஒரு த‌ம்மை வாயில் வைத்து தீப்பெட்டியைத் திறக்கும்போது தீக்குச்சி இல்லாம‌ல் இருக்கும்போதும்..

*******************

12 comments:

ஸ்ரீ.... said...

//ரொம்ப‌ த்ரில்லிங்கான‌ நாவ‌லின் க்ளைமேக்ஸ் க‌டைசி ப‌க்கத்திற்கு ஆவலோடு திருப்பும்போது அதை யாரோ கிழித்து இருக்கும் போதும்.....//

இந்த அனுபவம் அடிக்கடி நேர்வதுண்டு. அருமையான பதிவு.

ஸ்ரீ....

இராகவன் நைஜிரியா said...

ரொம்பவும் அயர்ச்சியான தருணங்களைப் பற்றித்தான் எழுதியிருக்கீங்க..

தாங்கமுடியலடா சாமி...

இராகவன் நைஜிரியா said...

// நைட் ஒரு ம‌ணிக்கு ப‌டித்து முடித்துவிட்டு, ரொம்ப ஆர்வமாக ஒரே ஒரு த‌ம்மை வாயில் வைத்து தீப்பெட்டியைத் திறக்கும்போது தீக்குச்சி இல்லாம‌ல் இருக்கும்போதும்..//

நாங்கெல்லாம் இதுக்குத்தான் லைட்டர் வச்சுகிறது..

இராகவன் நைஜிரியா said...

// ரொம்ப‌ நாள் க‌ழிச்சி த‌ண்ணி அடிக்க‌லாம் என்று சரக்கு வாங்கி 12 மணிக்கு மேல் அடிக்க உட்காரும்போது, மிக்ஸ் பண்ண வாட்டர் பாக்கேட்டும், வீட்டில் தண்ணியும் இல்லாமல் இருக்கும்போதும்..//

ராத்திரி 12 மணிக்கு மேல் எல்லாம் தண்ணியடிக்கப்பிடாது. மருத்துவருக்கு தெரிஞ்சா வம்பு வரும்.

கும்மாச்சி said...

அண்ணே நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க, இதையெல்லாம் சமகால மனிதர்களாகிய நாம் எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம் தான்.

Anonymous said...

மிகவும் அயர்ச்சியாகும் தருணங்களா?? கடுப்பாகும் தருணங்களா??

ஜெகன் said...

அவ்ளவுதானா? இன்னும் இருக்கா? அருமை):

Unknown said...

:-)

good one

கிரி said...

நல்லா இருக்கு கணேஷ்

Premnath Thirumalaisamy said...

அருமையா எழுதுறிங்க....எப்டிங்க இப்டி எல்லாம் எழுத தோணுது... எந்த ஆங்கிள்ள யோசிச்சாலும் நமக்கு மொக்க டாபிக் அஹ தான் சிக்குது... :-)
... வாழ்த்துக்கள்

தினேஷ் said...

//நைட் ஒரு ம‌ணிக்கு ப‌டித்து முடித்துவிட்டு, ரொம்ப ஆர்வமாக ஒரே ஒரு த‌ம்மை வாயில் வைத்து தீப்பெட்டியைத் திறக்கும்போது தீக்குச்சி இல்லாம‌ல் இருக்கும்போதும்..//

yes yes

Kevin from Dubai said...

Office la thaniya room pottu koduthu irukkurangala?

Venam....venam....azhuthuruven.

Related Posts with Thumbnails