கற்றது காதல்.. சிறிது காமமும்...

7.30 மணிக்கு அடித்துக் கொண்டிருந்த அலாரத்தின் தலையை ஓங்கி அறைந்து எழுந்தாள் திவ்யா, எரிச்சலுடன். அடிவயிறு விண் விண்னென்று வலியில் தெறித்தது. இடுப்பெலும்பிலும் கொஞ்சம் உறைத்தது. இனிமேல் அந்த ராஸ்கலை வீட்டுக்குள் விடக்கூடாது. ரொம்ப படுத்தி எடுத்துவிட்டான்.

நேற்று இரவை விட இப்போது ரொம்ப ஹாட்டாக இருந்தாள். தலைமுடியை வாரி சுருட்டிக் கொண்டே பாத்ரூம்க்கு நடந்து போனாள். பேஸ்ட்டின் த‌லையை ஒரு வித அயர்ச்சியுடன் பிதுக்கிகொண்டு இருக்கும்போது அவ‌ளின் அவ‌ன் கால் ப‌ண்ணினான்.

"ஹாய் ஹ‌னி, குட் மார்னிங்"

"நைட் நீ ப‌ண்ணுன‌துக்கு என‌க்கு இப்ப‌ பேட் மார்னிங் ஸ்டுப்பீட்"

"ஹேய் வாட் ஹேப்ப‌ன்ட்"

"ரொம்ப‌ பெயின். என்னால‌ இதுக்கு மேல‌யும் பொறுத்துக்க‌ முடிய‌ல‌. நான் ஊருக்கு போக‌லாம்னு இருக்கேன்"

"திவ், ஆர் யூ சீரிய‌ஸ்? இது ஒரு மேட்ட‌ரா? ந‌ம்ம‌ளால‌ அது இல்லாம கூட இருக்க முடியும்டி. நேத்து கூட உன்னை வீட்ல டிராப் பண்ணிட்டு நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னேன். நீ தான் வா, வந்து தோசை சாப்பிட்டுட்டு போகலாம்னு சொன்ன‌"

"தோசை ம‌ட்டும்தான் வ‌ந்து சாப்பிட்டு போன்னு சொன்னேன். வ‌ந்து நீ என்னென்ன‌மோ சாப்பிட்டு போயிட்ட.. இப்ப‌ நான்தான் க‌ஷ்ட‌ப்ப‌டுறேன்."

"நீ explicitடா கூப்பிடுறதுக்கு வெக்கப்படுறீயோன்னு நெனச்சி, நான் அத advantage எடுத்துக்கிட்டேன். ஃபைன்.. நேத்து ஒண்ணும் நாம புதுசா பண்ணலீயே.. வழக்கம்போல தான.."

"நீ மட்டும் நேர்ல இருந்த, செருப்பால அடிச்சிருப்பேன்"

"ஆல்ரைட்..கூல் டவுன்.. இப்ப ஏன் திடீர்ன்னு ஊருக்கு?"

"நம்ம மேட்டர வீட்ல எடுத்துச் சொல்லிட்டு சீக்கிரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லப் போறேன்.."

"இப்ப‌ தான் யூ.எஸ் விசா கெட‌ச்சிருக்கு.. 6 மாச‌ம் ஆன்சைட் போயிட்டு வ‌ர்ற‌து தான் ambitionன்னு சொன்ன‌.. என்ன‌ ஆச்சி உன்னுடைய‌ ambition?"

"நேத்து நைட் எவ்வ‌ள‌வோ க‌ன்ட்ரோல்ட்டா இருந்தும், அது ஆயிடுச்சின்னு நெனைக்கிறேன். நானும் பொண்ணு தான‌.. என‌க்கும் ஃபீலிங்க்ஸ் இருக்கு... ஸோ, நாளைப் பின்ன‌ க‌ன்ஃபார்ம் ஆயிடுச்சினா, க‌லைக்கிற‌த்துக்கு நாம ஒண்ணும் third rated couples கிடையாது. நாம‌ SEXக்காக‌ ல‌வ் ப‌ண்ணி திரியிற ஜோடியும் கிடையாது." க‌ண்க‌ல‌ங்கினாள்.

"Yep, I can understand. ஸோ ஃபைனலா...?"

"மார்னிங் 11.30க்கு தான‌ கிங்க்ஃபிஷ‌ர். நான் அதுல‌ கெள‌ம்பிடுறேன்."

"உங்க‌ டாடி?"

"I will take care"

*********

"என்ன‌டா.. திடீர்ன்னு.."

"ஒண்ணும் இல்லைப்பா.. சீக்கிர‌ம் க‌ல்யாண‌ வேலைய‌ப் பாருங்க‌ப்பா.. முடிஞ்சா இந்த மாசத்துக்குள்ள முடிச்சிடுங்க.."

"ஒரு வ‌ருஷ‌த்துக்கு அப்புற‌ம் தான் க‌லியாண‌ம்ன்னு மேடையில்ல‌யே சொன்ன‌.. என்ன‌ ஆச்சி உன் யூ.எஸ் வேலை?"

"அசோக் புதுசா தேடுன‌ வேலைக்கு H1B பெர்மனன்ட் விசா கிடைக்குற‌ மாதிரி இருக்கு. இந்த‌ நேர‌த்துல‌ என்னோட‌தையும் போட்டு குழ‌ப்பிக்க‌ வேணாம்ன்னு, முடிவ‌ மாத்திக்கிட்டோம்.."

"ந‌ல்ல‌ விஷ‌ய‌ம். எல்லா சொந்த‌க்கார‌ங்க‌ளும், நிச்ச‌ய‌தார்த்த‌ம் முடிஞ்சி ஒரு வ‌ருஷ‌த்துக்கு அப்புற‌ம் க‌ல்யாணமா? அப்ப‌டின்னு ச‌டைச்சிக்கிட்டு போனாங்க.. என் வேலை மிச்சம்.."

************

"என்ன‌டா, ஃபோன் ப‌ண்ணி உட‌னே வ‌ர‌ச் சொன்ன‌?"

மென்று முழுங்கிக் கொண்டே, "அப்பா, நீங்க தாத்தா ஆகப் போறீங்க‌.." வெட்க‌த்துட‌ன்..

.
.
.
...

"மாப்ளே, ஒரு மாச‌த்துக்குள்ளேயே.. இவ்வ‌ள‌வு ஸ்பீடா இருப்பீங்க‌ன்னு எதிர்பார்க்க‌ல‌.. இந்த சமயத்துல நீங்க‌ ரெண்டு பேரும் யூ.எஸ் போக வேண்டாம்.. ச‌ரிங்க‌ளா?"

"ச‌ரிங்க‌ மாமா.. நாங்க‌ நேத்தே முடிவு ப‌ண்ணிட்டோம்.."
.
.
.
.
.
"கலக்கிட்ட திவ்.. ஐ லவ் யூ. எப்படி கரெக்ட்டா அன்னைக்கே சொன்ன.." என்று கேட்டான், இளம் மேடான மூன்று மாத வயிறைத் தடவிக் கொண்டே..

"அதெல்லாம் அப்படித் தான்.."

"உங்க அப்பாவ சமாளிச்சது தான் ஹைலைட்.. லவ் யூ டி திவ்"

"லவ் யூ டூ அசோக்"

*****************************************

5 comments:

Prabhu said...

கதை நல்லாத்தான் போன மாதிரி இருந்துச்சு. ஆனா வேற மாதிரி இழுத்திட்டு போயிருக்கலாம்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//"ந‌ல்ல‌ விஷ‌ய‌ம். எல்லா சொந்த‌க்கார‌ங்க‌ளும், நிச்ச‌ய‌தார்த்த‌ம் முடிஞ்சி ஒரு வ‌ருஷ‌த்துக்கு அப்புற‌ம் க‌ல்யாணமா? அப்ப‌டின்னு ச‌டைச்சிக்கிட்டு போனாங்க.. என் வேலை மிச்சம்.."
//


இந்த வரியை எழுதினீங்களோ ... இல்லை கொஞ்சம் குழம்பித்தான் போயிறுப்போம்..



மொத்தத்தில் நன்று

limattech said...

திவ்ஸ் மட்டுமில்ல.. நீங்களூம் கலக்கிட்டீங்க..


http://limation.blogspot.com

CrazyBugger said...

Dey maamu, Un profile pic'la yaaruda athu.. kuttu padu sokka irukkae.. number kudra maamu :)

ஆர்வா said...

ஹேய் கலக்கிட்டீங்க... சூப்பர்ப்

Related Posts with Thumbnails