மிகவும் அயர்ச்சியான தருணங்கள்!

மூன்று மணிநேர ஸ்டாண்டிங்கில், திடீரென்று ஒரு ஸ்டாப்பில் எழுந்த ஒருவரின் சீட்டில் உட்கார்ந்து உஸ்ஸென்று மூச்சுவிடும்போது, ஏக்கத்துடன் கைக்குழந்தையுடன் ஒரு தாய் நின்று கொண்டு பார்க்கும்போதும்...

அப்பாவிட‌ம் 1000 ரூபாய் வாங்கி பர்த்டே ட்ரீட் கொடுக்க வாங்கி ரெடியாக இருக்கும்போது, க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாரும் விஷ் கூட ப‌ண்ணாமல் இருக்கும்போதும்....

ரொம்ப‌ த்ரில்லிங்கான‌ நாவ‌லின் க்ளைமேக்ஸ் க‌டைசி ப‌க்கத்திற்கு ஆவலோடு திருப்பும்போது அதை யாரோ கிழித்து இருக்கும் போதும்.....

கெட்ட‌ ப‌சியில் ஓப‌ன் ப‌ண்ணிய‌ த‌ல‌ப்பாக்க‌ட்டு பிரியாணி கெட்டுப் போய் சாப்பிட‌ முடியாம‌ல் இருக்கும்போதும்...

"மின்ன‌லே மாத‌வன்" மாதிரி ஃபிக‌ர் ப‌ர்த்டே அன்னைக்கு ஸ்பெஷ‌லா விஷ் ப‌ண்ண‌லாம் என்று ப்ளான் ப‌ண்ணும்போது, அன்று அவ‌ள் ப‌ர்த்டேவே இல்லை என‌ ப‌ல்பு வாங்கும்போதும்...

ஃபைன‌ல் மேட்ச் பார்க்க‌வேண்டும் என‌ லீவ் போட்டு உட்கார்ந்து இருக்கும்போது, க‌ரெக்ட்டா மேட்ச் ஸ்டார்ட் ப‌ண்ணுவ‌த‌ற்கு 5 நிமிட‌ம் முன்னால் ப‌வ‌ர் க‌ட் ஆகும்போதும்..

ரொம்ப‌ நாள் க‌ழிச்சி த‌ண்ணி அடிக்க‌லாம் என்று சரக்கு வாங்கி 12 மணிக்கு மேல் அடிக்க உட்காரும்போது, மிக்ஸ் பண்ண வாட்டர் பாக்கேட்டும், வீட்டில் தண்ணியும் இல்லாமல் இருக்கும்போதும்..

ப்ரோப்ப‌ஸ் ப‌ண்ண‌லாம் என்று இருந்த‌ "ஒரு த‌லை காத‌ல்" ஃபிக‌ர் த‌னியாக‌ கூப்பிட்டு மேரேஜ் இன்விடேஷ‌ன் கொடுக்கும்போதும்....

ர‌ஜினி ப‌ட‌த்தின் முத‌ல் நாள் முத‌ல் ஷோ ஆர்பாட்டத்துடன் போகும்போது, அது "பாபா", "குசேலனாக‌" இருக்கும்போதும்...

ஹை குவாலிட்டி 'அந்த' ப‌‌ட‌த்தை ஃப்ரெண்டிட‌ம் இருந்து உஷார் பண்ணி வாங்கி வ‌ந்து பார்க்க‌ப் போகும்போது, அந்த‌ டிவிடி மாறிப் போய் மொக்கை இங்க்லீஷ் ப‌ட‌ம் ஓடும்போதும்...

நைட் ஒரு ம‌ணிக்கு ப‌டித்து முடித்துவிட்டு, ரொம்ப ஆர்வமாக ஒரே ஒரு த‌ம்மை வாயில் வைத்து தீப்பெட்டியைத் திறக்கும்போது தீக்குச்சி இல்லாம‌ல் இருக்கும்போதும்..

*******************

தோரணை!

அண்ணனை தேடி சென்னை வரும் நாயகன், ரெண்டு ரவுடி க்ரூப் நடுவே மாற்றிக் கொண்டு வெற்றியோடு ஊருக்கு திரும்புகிறானா இல்லையா என்பதை ஜில்ஜில் ஸ்ரேயாவுடன் சொல்லும் படம். ஆச்சரியம் ஆனால் உண்மை, படத்தின் இன்டெர்வெல் வரை ஃபைட்டே இல்லை, இது விஷால் படமா இல்லை மாற்றி வந்துட்டோமா என்று யோசிக்கும்போது ஃபைட் ப்ளஸ் ட்விஸ்ட்டுடன் இன்டெர்வெல்.

அதற்கு முன்வரை படத்திற்கு வந்தவர்களை "ஏன்டா வந்தோம், திரும்பிப் போயிடலாம்" என்று பயந்து யோசிக்கவிடாமல் உட்கார வைத்த பெருமை சந்தானத்தை மட்டும் சேரும். ஆறு அடிக்கும் மேலே, லேம்ப் போஸ்ட் மாதிரி இருந்து கொண்டு, வாயை ஒரு மாதிரி சுளித்துக் கொண்டு விஷால் காமெடி பண்ணும்போதும் வயிறு எரிகிறது. அதுவும் இல்லாமல் எப்பவும் ஒரு வாரம் குளிக்காதவன் மாதிரி அழுக்காகவும், ச்சே கொடுமைடா சாமி. நல்ல ட்ரெஸ்ஸா போடுங்க சார்.. சிம்பு பட வரிசையில் இனிமேல் இவர் படத்தையும் தாராளமாக சேர்க்கலாம்.

ஸ்ரேயாவின் தமிழ் சினிமா வரலாற்றில், இதுவரை சேலை கட்டிக் கொண்டு பாடல் காட்சிகளில் நடித்த முதல் படம். ரெண்டு நிமிஷம்தான் வந்திருப்பார், ரெண்டு பாட்டிலும் சேர்த்து. கேமராமேன், ஸ்ரேயா ஃபேன் போல, கன்னாபின்னா ஆங்கிளில் எடுத்து ஆசையை தீர்த்துள்ளார். அது சரி நடிப்பு, "அடப்போங்க சார்.. ரொம்ப குறும்பு நீங்க" என்று கேட்பார். ப்ரகாஷ்ராஜ், ஒரு ரவுடி க்ரூப்பின் தலைவர். படம் பார்க்கும் நமக்கே இதே போல் எத்தனை படத்தில் தான் நடிப்பார் என்று தோன்றுகிறது. அவருக்கு தோணாதா? புருவத்தில் மட்டும் வெள்ளை முடி டை அடித்து கெட்டப் மாத்தி இருக்கிறார். க்ளைமேக்சில் விஷாலிடம் கேவலமாக அடி வாங்கி செத்துப் போகிறார், கொடுமை நம்பர் ஒன். என்ன ப்ரகாஷ்ராஜ் ஸார், "அபியும் நானும்" ஃப்ளாப் ஆனதுனால ரொம்ப நஷ்டம் ஆகிப்போச்சா?????

இன்னொரு ரவுடியாக, "பொல்லாதவன்" கிஷோர். ரொம்ப அடக்கியே வாசித்து இருக்கிறார். இவர்கள் தவிர மலையாள லால், ஷாயாஜி ஷிண்டே, லிவிங்ஸ்டன், பாஸ்கர், பாண்டியராஜன் என பெரிய லிஸ்ட் உண்டு. ரெண்டு பாடல்கள் ஓ.கே. ஸ்ரேயா இருப்பதால் அதில் கான்சென்ட்ரேட் பண்ண முடிய‌வில்லை. இடைவேளைக்கு அப்புறம் விஷால் பேசுவது எல்லாமே பஞ்ச் டையலாக். கொடுமை நம்பர் டூ. பிரகாஷ்ராஜ் கூட வரும் பாஸ்கர் அடிக்கும் "டைமிங் கமெண்ட்ஸ்" நல்ல காமெடி.

படத்தின் பெயரை "தோரணை" என வைத்துக் கொண்டு பாடல், பஞ்ச் டையலாக், வில்லன் என எல்லாரும் வார்த்தைக்கு வார்த்தை பேசிக் கொண்டிருப்பது போரடிக்கிறது. பை தி வே, தோரணை னா என்னன்னு என் ஃப்ரெண்ட்கிட்ட கேட்டேன். அவனுக்கும் தெரியலன்னு சொல்லிட்டான், கொடுமை நம்பர் த்ரீ. இடைவேளைக்கு பிறகு புத்திசாலத்தனமான காட்சி அமைப்புகளால், ஜஸ்ட் எஸ்கேப் ஆகி இருக்கிறது ஸ்கிரீன்ப்ளே ப்ளஸ் மூவி. நல்லவேளை, விஷாலின் அண்ணன் தப்பித்தார்.

தோரணை -- கரணம் தப்பினால் மரணம். தப்பவில்லை. ‍

************************

த்ரிஷாவின் டாட்டூவும், காத்ரினா ஆட்டமும்

கொஞ்ச நாளாக தொடர்ந்து எழுதவே முடியவில்லை. நானும் எப்படியாவது எழுதலாம் என்று பார்த்தால், முன்னர் இருந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போய் கொண்டிருக்கிறது. (அப்பாடா...)

"பசங்க" முதல் நாளே பார்த்துவிட்டேன். "புஜ்ஜிமா"வாக நடித்த குழந்தையை அப்படியே அள்ளி அவனுக்கு கன்னம் வலிக்கும்வரை முத்தம் கொடுக்க வேண்டும் என்று வில்லத்தனமான ஆசை ட்ரெயிலர் பார்க்கும்போதெல்லாம் தோன்றிக் கொண்டிருக்கிறது. தீம் கூட ஓகே.. சில்ரன் ஆஃப் ஹெவனில் இருந்த யதார்த்தம் அங்கங்கே மிஸ்ஸாகிறது போல் தோன்றுகிறது. ஆனால் எனக்கு ரொம்ப பிடித்த படம்.

"சர்வம்" கூட முதல் நாளே.. பீமா படத்தில் த்ரிஷா, வலது தோள்பட்டைக்கு கொஞ்சம் இல்லை ரொம்ப கீழாகவே குத்திக் கொண்ட டாட்டூ இன்னும் போகவில்லை போல.. எல்லா பாட்டிலும் ரொம்ப க்ளியராக தெரிகிறது. ரொம்ப இம்சை பண்ணுது.. ம்ம்ம்ம்ம்ம்... அஜீத், மாதவன் வரிசையில் ஆர்யா.. டான்ஸில் கெட்ட சொதப்பு சொதப்புகிறார். "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" ப்ரோக்ராமை தொடர்ந்து பார்க்க சொல்ல வேண்டும். ம் படம் எப்படியிருக்கு? "மரணம் இன்னொரு உயிரின் தொடக்கம்" என்று டைட்டில் கார்டில் பைபிள் வார்த்தையை ஸ்லைடுகிறார்கள். அப்பவே தெரிந்து விட்டது கதை.. மிச்சமெல்லாம் ஆவ்வ்வ்வ்வ்... எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கொடுத்த காசு த்ரிஷா டாட்டூவை பார்த்தத‌ற்கு சரியாகப் போய்விட்டது.

ஒரு வழியாக எலெக்சன் முடிந்துவிட்டது. இதை மன்மோகன் சிங் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார். எல்லாப் புகழும் ராகுலுக்கே.. அப்படி இப்படி என்று ஐபிஎல்லும் முடிந்துவிட்டது. டெக்கான் சார்ஜர்ஸ், நல்ல டீம் என்றாலும், என்னால் முடிவை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. வோடஃபோன் ஜூஜூவை ரொம்ப மிஸ் பண்ண போகிறேன். மைக்கேல் ஜாக்சன் போல ஈபிள் டவர் முன்னால் காதலி பின்னால் சுற்றும் ஜூஜூ தான் ரொம்ப ரொம்ப ஃபேவரைட். அப்புறம் அந்த Beauty Alerts.. ச்சான்ஸே இல்லை.. நைஸ் க்ரியேட்டிவிட்டி.. Closing ceremony ல் காத்ரீனா கைஃப் போட்ட ஆட்டம் அட்டகாசம். ஒல்லிக்குச்சியாய் இருந்தவர் இப்போது கொஞ்சம் பூசினாற் போல ரொம்ப சூப்பர்ப். என்னுடைய ஃபேவரைட் ஸ்டார்.

இந்த இரண்டும் முடிந்து விட்டது இனிமேல் டைம் பாஸ் பண்ண.. கிண்டல் பண்ண.. சீக்கிரம் விஜய் படத்தை ரிலீஸ் பண்ணுங்கப்பா.. அட அதுக்கு முன்னால் டி20 வேர்ல்டு கப் இருக்குல்ல.. அதுவரைக்கும் சீஸரும், மேன்ஷன் ஹவுஸும்.. ஓ.கே..

சந்தேகம்: இனிமேல் "மத்திய அமைச்சர் அண்ணன் அழகிரி வாழ்க" என்று மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு கத்தினால் 1000 ரூபாய் தருவார்களா????

************************

தமிழன் ஒருவனுக்கும் வெட்கமில்லை..

ஆஃபிஸில் இருந்து சீக்கிரம் கிளம்ப சொல்லிவிட்டார்கள்..

பஸ் ஓடவில்லை.. ஷேர் ஆட்டோவில் டிரைவர் சீட்டில் நாலு பேருடன் எல்லீயட்ஸ் பீச் சடன் விசிட்..

எதிர்பாராமல் காதலியுடன் காதலன் குல்ஃபி ஐஸ் சாப்பிட சான்ஸ்..

சன் மியூசிக்கில் "பளபளக்கிற பகலா நீ" சூர்யா 1000வது முறையாக ஆட்டம்

ங்கொக்காமக்கா.. ஒரே செகண்டில் ஷேர் மார்க்கெட் 2000 புள்ளிகள் ராக்கெட் வேகத்தில் சீறியது..

ஐபிஎல் மேட்ச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூருவிடம் தோத்துப் போச்சி.. டெய்லர் கட்டையில் போக..

டாஸ்மாக்கில் தள்ளுமுள்ளு வழக்கம்போல்.. பீர் கூலிங்கா இல்லை.. கல்யாணி கூட இல்லை..

சிரித்தபடி மன்மோகன்சிங் ராஜினாமா கடிதம் பிரதீபாவிடம் கொடுத்தார்..

தமிழனுக்கு தந்தி அடிக்க சொன்ன கலைஞர், தம் மக்களுக்கு கேபினட் சீட் வாங்க டெல்லி பயணம்.. சன் நியூஸில் ஃப்ளாஷ் நியூஸ் ஸ்க்ரோல் ஓடுகிறது..

தலப்பாக்கட்டு பிரியாணியில் லெக்பீஸ் கிடைத்தது.. கொஞ்சம் காரம்..

சத்யம் தியேட்டரில் சர்வம் படம் செகண்ட் ஷோ.. ரூம்மேட்ஸூடன்.. செம குளிரு...

ச்சே.. திரிஷாவ இன்டெர்வெல்ல சாகடிச்சிட்டாங்க..

த்தூ..வழக்கம்போல் தமிழன் ஒருவனுக்கும் வெட்கமில்லை..

தன்மானத் தமிழன் வீட்டுக்குள் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறான்.. சிலர் பதிவுகள் எழுதி, இது பொய்யான செய்தி என தமிழ்கூறும் நாசமாபோன உலகிற்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்..

****************************

கற்றது காதல்.. சிறிது காமமும்...

7.30 மணிக்கு அடித்துக் கொண்டிருந்த அலாரத்தின் தலையை ஓங்கி அறைந்து எழுந்தாள் திவ்யா, எரிச்சலுடன். அடிவயிறு விண் விண்னென்று வலியில் தெறித்தது. இடுப்பெலும்பிலும் கொஞ்சம் உறைத்தது. இனிமேல் அந்த ராஸ்கலை வீட்டுக்குள் விடக்கூடாது. ரொம்ப படுத்தி எடுத்துவிட்டான்.

நேற்று இரவை விட இப்போது ரொம்ப ஹாட்டாக இருந்தாள். தலைமுடியை வாரி சுருட்டிக் கொண்டே பாத்ரூம்க்கு நடந்து போனாள். பேஸ்ட்டின் த‌லையை ஒரு வித அயர்ச்சியுடன் பிதுக்கிகொண்டு இருக்கும்போது அவ‌ளின் அவ‌ன் கால் ப‌ண்ணினான்.

"ஹாய் ஹ‌னி, குட் மார்னிங்"

"நைட் நீ ப‌ண்ணுன‌துக்கு என‌க்கு இப்ப‌ பேட் மார்னிங் ஸ்டுப்பீட்"

"ஹேய் வாட் ஹேப்ப‌ன்ட்"

"ரொம்ப‌ பெயின். என்னால‌ இதுக்கு மேல‌யும் பொறுத்துக்க‌ முடிய‌ல‌. நான் ஊருக்கு போக‌லாம்னு இருக்கேன்"

"திவ், ஆர் யூ சீரிய‌ஸ்? இது ஒரு மேட்ட‌ரா? ந‌ம்ம‌ளால‌ அது இல்லாம கூட இருக்க முடியும்டி. நேத்து கூட உன்னை வீட்ல டிராப் பண்ணிட்டு நான் வீட்டுக்கு போறேன்னு சொன்னேன். நீ தான் வா, வந்து தோசை சாப்பிட்டுட்டு போகலாம்னு சொன்ன‌"

"தோசை ம‌ட்டும்தான் வ‌ந்து சாப்பிட்டு போன்னு சொன்னேன். வ‌ந்து நீ என்னென்ன‌மோ சாப்பிட்டு போயிட்ட.. இப்ப‌ நான்தான் க‌ஷ்ட‌ப்ப‌டுறேன்."

"நீ explicitடா கூப்பிடுறதுக்கு வெக்கப்படுறீயோன்னு நெனச்சி, நான் அத advantage எடுத்துக்கிட்டேன். ஃபைன்.. நேத்து ஒண்ணும் நாம புதுசா பண்ணலீயே.. வழக்கம்போல தான.."

"நீ மட்டும் நேர்ல இருந்த, செருப்பால அடிச்சிருப்பேன்"

"ஆல்ரைட்..கூல் டவுன்.. இப்ப ஏன் திடீர்ன்னு ஊருக்கு?"

"நம்ம மேட்டர வீட்ல எடுத்துச் சொல்லிட்டு சீக்கிரமா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண சொல்லப் போறேன்.."

"இப்ப‌ தான் யூ.எஸ் விசா கெட‌ச்சிருக்கு.. 6 மாச‌ம் ஆன்சைட் போயிட்டு வ‌ர்ற‌து தான் ambitionன்னு சொன்ன‌.. என்ன‌ ஆச்சி உன்னுடைய‌ ambition?"

"நேத்து நைட் எவ்வ‌ள‌வோ க‌ன்ட்ரோல்ட்டா இருந்தும், அது ஆயிடுச்சின்னு நெனைக்கிறேன். நானும் பொண்ணு தான‌.. என‌க்கும் ஃபீலிங்க்ஸ் இருக்கு... ஸோ, நாளைப் பின்ன‌ க‌ன்ஃபார்ம் ஆயிடுச்சினா, க‌லைக்கிற‌த்துக்கு நாம ஒண்ணும் third rated couples கிடையாது. நாம‌ SEXக்காக‌ ல‌வ் ப‌ண்ணி திரியிற ஜோடியும் கிடையாது." க‌ண்க‌ல‌ங்கினாள்.

"Yep, I can understand. ஸோ ஃபைனலா...?"

"மார்னிங் 11.30க்கு தான‌ கிங்க்ஃபிஷ‌ர். நான் அதுல‌ கெள‌ம்பிடுறேன்."

"உங்க‌ டாடி?"

"I will take care"

*********

"என்ன‌டா.. திடீர்ன்னு.."

"ஒண்ணும் இல்லைப்பா.. சீக்கிர‌ம் க‌ல்யாண‌ வேலைய‌ப் பாருங்க‌ப்பா.. முடிஞ்சா இந்த மாசத்துக்குள்ள முடிச்சிடுங்க.."

"ஒரு வ‌ருஷ‌த்துக்கு அப்புற‌ம் தான் க‌லியாண‌ம்ன்னு மேடையில்ல‌யே சொன்ன‌.. என்ன‌ ஆச்சி உன் யூ.எஸ் வேலை?"

"அசோக் புதுசா தேடுன‌ வேலைக்கு H1B பெர்மனன்ட் விசா கிடைக்குற‌ மாதிரி இருக்கு. இந்த‌ நேர‌த்துல‌ என்னோட‌தையும் போட்டு குழ‌ப்பிக்க‌ வேணாம்ன்னு, முடிவ‌ மாத்திக்கிட்டோம்.."

"ந‌ல்ல‌ விஷ‌ய‌ம். எல்லா சொந்த‌க்கார‌ங்க‌ளும், நிச்ச‌ய‌தார்த்த‌ம் முடிஞ்சி ஒரு வ‌ருஷ‌த்துக்கு அப்புற‌ம் க‌ல்யாணமா? அப்ப‌டின்னு ச‌டைச்சிக்கிட்டு போனாங்க.. என் வேலை மிச்சம்.."

************

"என்ன‌டா, ஃபோன் ப‌ண்ணி உட‌னே வ‌ர‌ச் சொன்ன‌?"

மென்று முழுங்கிக் கொண்டே, "அப்பா, நீங்க தாத்தா ஆகப் போறீங்க‌.." வெட்க‌த்துட‌ன்..

.
.
.
...

"மாப்ளே, ஒரு மாச‌த்துக்குள்ளேயே.. இவ்வ‌ள‌வு ஸ்பீடா இருப்பீங்க‌ன்னு எதிர்பார்க்க‌ல‌.. இந்த சமயத்துல நீங்க‌ ரெண்டு பேரும் யூ.எஸ் போக வேண்டாம்.. ச‌ரிங்க‌ளா?"

"ச‌ரிங்க‌ மாமா.. நாங்க‌ நேத்தே முடிவு ப‌ண்ணிட்டோம்.."
.
.
.
.
.
"கலக்கிட்ட திவ்.. ஐ லவ் யூ. எப்படி கரெக்ட்டா அன்னைக்கே சொன்ன.." என்று கேட்டான், இளம் மேடான மூன்று மாத வயிறைத் தடவிக் கொண்டே..

"அதெல்லாம் அப்படித் தான்.."

"உங்க அப்பாவ சமாளிச்சது தான் ஹைலைட்.. லவ் யூ டி திவ்"

"லவ் யூ டூ அசோக்"

*****************************************

ரோஜாவுக்கே ரோஜா!

கொட்டும் மழையோ
பிளக்கும் வெயிலோ
உன்னுடன் இருக்கும்போது
உறைக்கவில்லை
சலனமற்ற சாத்தானின்
இரவில்தான் சப்தமாக
உறைக்கிறது தனிமை!
உன்னுடைய வெறுமை!

40 டிகிரி சென்னை வெயிலோ,
4வது மாடி போத்தீஸோ,
400 பேருடைய உஸ்மான் ரோட்டின் உதாசீன இடியோ,
பெரிதாகத் தெரியவில்லை
உனக்கான பரிசுப்பொருளைத்
தேரி அலையும்போது!

புத்தாடை பரிசளித்தேன்
பரவாயில்லை என சுளிக்கவில்லை
வலிக்காமல் தலையில் குட்டினேன்
கோபமாக முறைக்கவில்லை
ரோஜாவுக்கே ரோஜா வாங்கி சூட்டினேன்
ஏன்? புருவம் உயர்த்தவில்லை
தெரியாமல் தெரிந்தே ஒட்டி நடந்தேன்
விலகி நடக்கவில்லை
நாள் முழுவதும் உடனிருந்தாலும்
வீட்டுக்கு விடைபெறும்போது
விட்டு விட்டு வலித்தது இதயம்
மனது விட்டு கேட்கத் துடித்தது
ஏன்
வருடம் முழுவதும்
உன்னுடைய பிறந்தநாளாக
இருக்கக் கூடாது?

************************

From Archive:

ப‌ர்த்டேக்கு நீயே செய்து
எடுத்து வ‌ந்த‌ குளோப் ஜாமூனைவிட
தேனாய் இனித்தது
செல்லும்போது க‌ன்ன‌த்தில் நீ இட்ட‌ முத்த‌ம்!
ச‌ரி அதே ஸ்வீட் உன் ப‌ர்த்டேக்கு
த‌ர‌லாமென்று நான் நினைத்தால்
திளைக்க திளைக்க‌ இத‌ழ்முத்த‌ம்
த‌ந்து யோசிக்க‌ வைத்தாய்
கிஃப்ட் என‌க்கா? உன‌க்கா?
இல்லை ந‌ம‌க்கு.

***************

Related Posts with Thumbnails