VALKYRIE - திரை விமர்சனம்

ஒரு நாட்டின் தலைவரை, அந்நாட்டு ராணுவமும், மக்களும் 42 தடவை கொலை செயவதற்கு முயற்சி செய்துள்ள்ளார்கள். ஆனாலும் அவர் சாகவில்லை. ஒரு கட்டத்தில் அவரே தற்கொலை செய்துகொண்டார். இந்த மோசமான புள்ளியியல் தகவலுக்கு சொந்தக்காரர் இரண்டாம் உலகப்போரில் கெட்ட அடி வாங்கிய ஜெர்மனியின் சர்வாதிகாரி, அடால்ஃப் ஹிட்லர். இந்த 42 முயற்சிகளிலும், ஹிட்லர் மோசமாக அடிபட்டு, கிட்டத்தட்ட சாவை பக்கத்தில் பார்த்துவிட்டு திரும்பிய ஆபரேஷன் தான் "VALKYRIE". (பைக் ஆக்சிடென்ட் ஆகிறதுக்கு முன்னால, படம் பார்த்தேன்னு சொன்னேன்ல, அது இந்த படம் தான்). இது முழுக்க முழுக்க, ஹிட்லரின் நாசிப்படை தளபதிகளால் திட்டமிடப்பட்டு, நடத்தப்பட்ட அட்டாக்.

டாம் க்ரூஸ், இந்த திட்டத்தின் போர்ப்படை தளபதி. மற்றபடி வேறு யார் யார் நடித்தார்கள் என்று தெரியவில்லை. ஹிட்லராக நடித்தவரின், பாடி லாங்குவேஜ் அசத்தலாக இருந்தது. அந்த குறுமீசையும், "இந்தியன்" தாத்தா மாதிரி ஹேர் ஸ்டைலும், கொஞ்சம் தளர்வாக நடக்கும் நடையும் அற்புதம்.

நாசி படைகள், ஆஃப்ரிக்காவில் நடக்கும் போரில் இருந்த போது, அங்கு இருந்த டாம் க்ரூஸ் எதிரி நாட்டு படைகளால், மிகவும் கொடுமையான முறையில் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருந்து படம் ஆரம்பிக்கிறது. அந்த சண்டையில் அவரது வலது கையின் முன்பகுதி முழுவதும் சிதைந்து விடுகிறது, இடது கண்ணிலும் முழுமையாக பார்வை போய் கண்ணையே எடுத்து விடும் அளவுக்கு அடி. அந்த நேரத்தில், சிறுபிள்ளைத்தனமான தலைவரால், நாசி படை வீரர்கள் தினமும் இப்படி இறக்க வேண்டி இருக்கிறதே என்று ஃபீல் பண்ணி "VALKYRIE" என்னும் திட்டத்தை தீட்டுகிறார்.

அதாகப்பட்ட திட்டம் என்னவென்றால், ஜெர்மனிக்கு எமர்ஜென்சி சூழ்நிலை ஏதாவது வந்துவிட்டால், நம்மிடம் இருக்கும் ரிசர்வ் ராணுவப்படையை பயன்படுத்தி முக்கிய நகரங்களான பெர்லின், முனீச் இடங்களில் உள்ள ராணுவ தலைமை இடங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். எமர்ஜென்சி சூழ்நிலை என்றால், ரஷியப்படைகள் ஜெர்மனியை சுற்றிவளைத்துவிட்டாலோ அல்லது வேறு நாட்டு படைகள் உள்ளே புகுந்துவிட்டாலோ, இதுவும் இல்லை ஒருவேளை ஹிட்லரே இறந்துவிட்டாலோ, இந்த அவசர திட்டம் அமல்படுத்தப்படும். இது தான் VALKRYIE ஆபரேஷனின் சாராம்ஷம். அப்படி இப்படி என்று ஏதேதோ பேசி ஹிட்லரையே கன்வின்ஸ் பண்ணி, அவரை இந்த ஆபரேஷன் பேப்பர்ஸில் கையெழுத்து போட வைத்து விடுவார்கள்.

இந்த திட்டத்தில், டாம் க்ரூஸ் உள்ளிட்டோர் டார்கெட் பண்ணிய பாயிண்ட், ஹிட்லர் இறந்தாலும், VALKRYIE ஐ நடைமுறைப்படுத்தலாம் என்பதே. அதற்காக கிழக்கு ஜெர்மனியின், ரஷ்ய எல்லைப்பகுதியில் நடக்கும் ரகசிய மீட்டிங்கில், அவரை தீர்த்துக்கட்ட பிளான். அதற்காக டெட்டனேட்டரில் டைமர் செட் பண்ணி வெடிக்க வைப்பதாக திட்டம். முதல் முயற்சியில், இத்தாலியின் முசோலினி எதிர்பாராதவிதமாக வந்து விடுவதால், அத்திட்டம் தோல்வியில் முடிகிறது. அதற்கடுத்த வாரமே (ஜூலை 20, 1944), நடக்கும் மீட்டிங்கில் அவர்களின் திட்டம் வெற்றியில் முடிகிறது. நாடு முழுவதும் எமர்ஜென்சி அமல்படுத்தப்படுகிறது. ஹிட்லர் ஆதரவாளர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆனால் அதிர்ஷடவசமாக(துரதிருஷ்டவசமாக) ஹிட்லர் பெரும் காயங்களுடன் தப்பித்துவிடுகிறார். இந்த உண்மையெல்லாம்(அதாவது ராணுவ தளபதிகளின் ரகசிய திட்டம்) ஜெர்மனி மக்களுக்கு தெரிய வரும்போது, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு நடுரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

(இந்த படத்தின் கதையை சொல்வதற்குள், தாவு தீர்ந்துவிட்டது. இதற்கப்புறம் விமர்சனம் வேற. அடப்போங்கப்பா..என்னடா பெரிய‌ ஹாலிவுட் படம்.. இனிமே தமிழ் சினிமா மக்களை பார்த்தாவது கதையே இல்லாமல் மூணு மணிநேரம் எப்படி ஓட்டுவது என்று தெரிஞ்சிக்கோங்க..)

படம் முழுவதும் டாம் க்ரூஸ், ஒரு கண்ணை மூடியபடி வருகிறார். ஹிட்லரை பார்த்து பேசும்போது மட்டும், செயற்கை கண்ணை எடுத்து கண்ணின் குழிக்குள் பொருத்தி நார்மல் மனிதன் போல் இருக்கிறார். தலையே திருப்பும்போது அந்த கண்ணின் கருவிழிகள் நகராமல், அது செயற்கை கண் என்று உணர்த்தும்படி சிறப்பாக செய்துளார்கள். ஹிட்லரின், ப்ரைவேட் பங்களா இருக்கும் இடம் அட்டகாசம். இது ஒரு பீரியட் ஃபிலிம் என்பதை ஆங்காங்கே நியாபகப்படுத்துகிறார்கள். டிரங்க் கால்ஸ், மெகாஃபோனில் பாட்டு கேட்பது, மை பேனாவில் கையெழுத்து போடுவது, தந்தி அடித்து ராணுவ ரகசியங்கள் அனுப்புவது என்று ஓரளவு நம்மை அந்த காலத்துக்கு இழுத்து செல்கிறார்கள்.

ஹிட்லரை கொலை செய்யும் அந்த இடம், நல்ல பரபரப்பான க்ரைம் நாவலுக்கான உண்டான விறுவிறுப்பு. டெட்டனேட்டரை ஆன் செய்த ஹேண்ட் பேக்கை மீட்டிங் ஹாலில் ஹிட்லர் கால் அருகில் விட்டு விட்டு, டாம் க்ரூஸ் அந்த இடத்தை விட்டு எஸ் ஆவதும், பின்னர் மீட்டிங்கில் ஒரு கட்டத்தில் ஹிட்லர் கோபமாக மேஜையைக் குத்த அவர் காலடியில் இருந்த பேக், கீழே விழுவதும், அதை அருகில் அமர்ந்து இருப்பவர், தூரத்தில் தூக்கி வைப்பதும் தான், ஹிட்லர் உயிர்பிழைத்ததற்கு காரணம்.(என்பதை படம் முடிந்தவுடன் தான் உணர்வீர்கள்). அங்கிருந்து காரில் செக்போஸ்டை டாம் க்ரூஸ் கடந்து வரும் வரையில் அந்த பரபரப்பு பின்னி எடுக்கிறது.

வழக்கமான இங்க்லீஷ் படத்தில் வரும் சண்டை, கிஸ், பெட்ரூம் சீன், blah, blah எதுவும் இந்த படத்தில் இல்லை. ஸோ, அப்பீட் ஆயிருங்க.(ஏமாந்தவன் சொல்றேன், கேட்டுக்கோங்க) பீட்டர் பீட்டர் மற்றும் பீட்டர் ஒன்லி. மக்கா, பேசிகிட்டே இருக்காய்ங்க.. சப் டைட்டில், இல்லாமல் படம் பார்த்தால் ஒன்றும் புரியாமல், பக்கத்து வீட்டு எல்.கே.ஜி படிக்கும் பாப்பாவிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டி இருக்கும். மேலும் ஹிஸ்டரி கொஞ்சம் தெரிஞ்சி இருக்கணும். உஷார். (சத்யம் தியேட்டரில், சப்டைட்டில் போட மாட்டாங்களா??????????)

**********************
கொசுறு: இந்த சம்பவம் உண்மையிலே நடந்தபோது, தப்பித்த ஹிட்லரின் கிழிந்துபோன பேண்ட். மனுஷன், எவ்வளவு அடிவாங்கியிருக்கார்னு பாருங்க.

Thanks: WIKIPEDIA

..

6 comments:

ஷண்முகப்ரியன் said...

சமயங்களில் படத்தை விட விமர்சனங்கள் விறுவிறுப்பாக இருக்கிறது.இது போல.நன்றி,கணேஷ்.

Rajalakshmi Pakkirisamy said...

Photo..... :) :) :)

பாலா said...

அப்பாடா.. இந்த படத்துக்கு இனிமே நான் ‘விமர்சனம்’ எழுத தேவையில்லை..!! சூப்பரா எழுதறீங்க தல..!! இன்னும் நிறய ஹாலிவுட் விமர்சங்களை எழுதுங்க...!! ;-)

butterfly Surya said...

நல்லாயிருக்கு நண்பரே.

வாழ்த்துகள்.

தொடரவும்.

butterfly Surya said...

நல்லாயிருக்கு நண்பரே.

வாழ்த்துகள்.

தொடரவும்.

கணேஷ் said...

ஷண்முகப்ரியன், வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. மிக்க சந்தோஷமாக உள்ளது.

ஹாலிவுட் பாலா, ரொம்ப‌ தேங்க்ஸ் த‌ல‌..

இராஜ‌ல‌ட்சுமி, வ‌ண்ண‌த்துபூச்சியார், ரொம்ப‌ ந‌ன்றி..

Related Posts with Thumbnails