கேப்டன் சீட் அடியில் தீ!!

தோனி. இன்று கிரிக்கெட் விளையாடும் எல்லா நாட்டுக்காரர்களையும் கலவரப்படுத்தும் பெயர். விளையாட கிரவுண்டுக்குள் இறங்கும்போதே அதிர்ஷ்டத்தையும் கையோடு கூட்டி வரும் மனிதன். 'தலைக்கு மேல் வெள்ளம்' என்ற சூழ்நிலை வரும்போதும் டென்ஷன் ஆகாமல் அமைதியாக வளர்ந்து நிற்கும் வீரர். வெற்றி பெறும் ஒவ்வொரு மேட்சின் இறுதியில் பேசும்போது மூச்சு விடுகிறாரோ இல்லையோ, "This is very good Team effort" என்று மறக்காமல் சொல்லும் சிறந்த கேப்டன்.

இங்கிலாந்து அணி இந்தியா வந்து விளையாடிய 5 ஒரு நாள் போட்டிகளிலும் தோற்று நாடு திரும்பியது. மும்பை தாக்குதல் நடக்காமல் இருந்திருந்தால் 7 போட்டிகளிலும் தோற்றுவிட்டு தான் திரும்பி இருப்பார்கள். அவமானப்பட்டு ஊருக்கு போன பீட்டர்சன், டிரஸ் சேஞ்ச் பண்ணினாரா என்று கூட‌ தெரியவில்லை. ஆனால் அதற்கு முன்னால் மீடியாவிடம் சொன்னது, "இங்கிலாந்து அணியின் கேப்டன் பதிவியில் இருந்து விலகுகிறேன்".

அடுத்து ஒரு மாதம் ஓய்வு. இந்தியா இலங்கை சுற்றுப்பயணம் சென்றது. தொடர்ந்து 4 போட்டிகளிலும் இலங்கையை அணியை துரத்தி துரத்தி அடித்தனர். இந்த சூடான இளைஞர் படை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினை நம்பி இல்லை என்று உலகத்திற்கு நிரூபிக்க அம்பயர் தர்மசேனா உதவினார். மூன்று போட்டிகளிலும் சீக்கிரமாக தவறாக அவுட் கொடுத்து இலங்கைக்கு உதவினார். இலங்கையின் கெட்ட நேரம், இப்போது இருக்கும் இந்திய அணியில் யாருமே அவுட் ஆஃப் ஃபார்மில் இல்லை. ஒரு மேட்ச்சில் ஷேவாக் வெளுத்து வாங்கினார் என்றால், இன்னொரு மேட்ச்சில் கம்பீர் 150 அடித்து பொறுமையை சோதித்தார். இது எல்லாவற்றிற்கும் மேலாக யுவராஜின் கெட்ட கெட்ட ஃபார்ம். அவருடைய ப்ளஸ், பௌலரை பார்த்து பயப்படாமல், பதட்டப்படாமல் அசால்ட்டாக அநாயாசமாக விளையாடி பௌலரின் கான்ஃபிடன்ஸை உடைப்பது. தோனியை பற்றி சொல்ல வேண்டியதில்லை. அவருக்கு இருக்கும் நம்பிக்கை, அவருடைய ப்ளானுக்கு ஏற்றார்போல இருக்கும் ரொம்ப ஃப்ளெக்சிபிளான டீம்.

ஒரு நாள் போட்டியில் வாங்கின அடி போதாது என்று 20 20யிலும். 15 ஓவர் மேட்ச் வரை இலங்கைக்கு சாதகமாக தான் இருந்தது. அவர்களுக்கு தேவை மூன்று விக்கெட் மட்டுமே! ஆனால் அவர்களின் கெட்ட நேரம் யூசஃப் பதான், இர்ஃபான் பதான் உருவத்தில் களத்தில் அதகளம் பண்ணியது. பதான் பிரதர்ஸ் எல்லா திட்டத்தையும் தவிடு பொடியாக்கி, இலங்கை அணியை மண்டை காய வைத்தார்கள். அந்த டென்ஷன் இர்ஃபான் முகத்தில் அடிக்கடி ரேகைகளாக தோன்றி மறைந்து கொண்டிருந்தது. ஆனால் "கடவுள் பாதி மிருகம் பாதி" ரேஞ்சில் இருந்த யூசஃப், ரொம்ப கூலாக பபிள்கம் மென்று கொண்டிருந்தார். கடைசி ஓவரில் 5 மட்டும் தேவையான சூழ்நிலையில் கூட, ஒரு இளம்பெண் சாமி கும்பிட்டுக் கொண்டே இலங்கை ஜெயிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. இனிமேல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 2020 போட்டிகளை பார்க்கக்கூடாது என்று சொல்லவேண்டும். அந்த பதற்றம், பரபரப்பு, எக்ஸைட்மென்ட் எல்லாம் ஒத்துவராமல் B.P எகிற வாய்ப்பு உண்டு.

அனைத்தையும் முடித்துவிட்டு இந்தியா அங்கிருந்து கிளம்ப கூட இல்லை. அதற்குள் இலங்கை அணி கேப்டன், ஜெயவர்த்தனே கேப்டன் பதவியை ராஜினாமா பண்ணபோவதாக அறிவித்துள்ளார். இதற்கு வேறு என்ன காரணமாய் இருக்க முடியும்? எல்லாவற்றிற்கும் தோனி & டீம் தான் காரணம்.

இனிமேல் யார் யாரெல்லாம் கேப்டன் பதிவியை ராஜினாமா பண்ண போகிறார்கள் என்று தெரியவில்லை. அடுத்து நியூசிலாந்திற்கு இந்திய அணி சுற்றுபயணம் செய்ய இருக்கிறது. டேனியல் வெட்டோரி தான் கேப்டன் என்று நினைக்கிறேன். வெட்டோரி, உஷார். நீ உட்காரும் கேப்டன் சீட் அடியில் தீ எரிந்து கொண்டிருக்கிறது.

11 comments:

வெண்பூ said...

இப்போதைய நிலைமைய நெனச்சி சந்தோஷம் மட்டும் பட்டுக்க வேண்டியதுதான்.. நம்ம ஆளுங்க எப்ப கால வாருவாங்கன்னு தெரியாது.. அப்ப வருத்தப்படுறது கம்மியா இருக்கும்.. :)))

கார்த்திகைப் பாண்டியன் said...

இந்தியா ஜெயிக்கட்டும் நண்பா.. ஆனால் அதே நேரம் விட்டோரி பொழச்சு போகட்டும்.. விட்ருங்க.. ரொம்ப நல்ல பிளேயர்

Viji Sundararajan said...

நான் கூட நம்ப விஜயகாந்த் அண்ணாச்சி பத்தி எதோ எழுதி
இருக்கிங்கன்னு நினைச்சு ஓடி வந்து ஏமாந்துட்டன் :-)

மணிகண்டன் said...

*********
வெட்டோரி, உஷார். நீ உட்காரும் கேப்டன் சீட் அடியில் தீ எரிந்து கொண்டிருக்கிறது.
**********

பாத்து இருக்க சொல்லுங்க ! வேகாம அந்த தீ பரவி அவரையே புடிச்சுட போகுது !

நாமக்கல் சிபி said...

//வெட்டோரி, உஷார். நீ உட்காரும் கேப்டன் சீட் அடியில் தீ எரிந்து கொண்டிருக்கிறது.//

:))

எட்வின் said...

கலக்கல் கட்டுரை பாஸ்... எப்போவும் நியூசிலாந்தில் நம்மவர்கள் திணறுவார்கள். தோனியின் முதல் பயணமென்று நினைக்கிறேன் கிவிக்கு. பட்டைய கிளப்பினா சரி தான்.

சரவணகுமரன் said...

ராம் சுரேஷ், தெளிவா இருக்கு எழுத்து...

Anonymous said...

good commedy

Anonymous said...

Mr Suresh, I think your are very humorous in nature

SUBBU said...

//நான் கூட நம்ப விஜயகாந்த் அண்ணாச்சி பத்தி எதோ எழுதி
இருக்கிங்கன்னு நினைச்சு ஓடி வந்து ஏமாந்துட்டன் :-)//
ரிப்பீட்டு :))))

shabi said...

konjam jeyicha podhum aha ohonnu ezhudhurathu thothutta polamburadhu en news paper karan mariye neenagalum padivu podureenga

Related Posts with Thumbnails