வில்லு - விமர்சனம்


நேர்மையான ராணுவ அதிகாரியான தந்தையை தந்திரமாக கொலை செய்த வில்லன் க்ரூப்பை அதிரடியான மகன் பழிவாங்கும் எம்.ஜி.ஆர் காலத்து கதையை வைத்து மீண்டும் விஜய் பிரபுதேவா காம்பினேஷன் பட்டையைக் கெளப்பியுள்ளனர்.

கதை தூத்துக்குடியில் ஆரம்பித்து முனீச், ஜெர்மனிக்கு தாவி மீண்டும் சென்னையில் முடிகிறது. முதல் பாதியில் வரும் நீர்வீழ்ச்சியுடன் கூடிய கிராமம் எது என்று தெரியவில்லை. அருமையான லொகேஷன்.

தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் விஜய். ரொம்ப மெனக்கெடாமல் டபுள் கெட்டப். பிரபுதேவா, விஜய் கூட்டணியின் பழைய போக்கிரி டெம்ப்ளேட்டை தூசி தட்டி, புதிதாக எடுத்து இருக்கிறார்கள். காஸ்ட்யூம் மட்டும் வித்தியாசமாக ஸ்டைலிஷாக உள்ளது. பல்லி மாதிரி இருந்த நயன்தாரா இந்த படத்தில் பழைய ஃபார்ம். லைட்டாக சதை போட்டு இருக்கும் அவர் முதல் பாதியில் விஜயுடன் பண்ணும் காமெடி காட்சிகள் சிரிப்பை வரவழைப்பதற்கு பதில் கவர்ச்சியில் தாரா.....ளம். முடியல...

வடிவேலு இப்போது அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கிறார். வாயை உவ்வென்று குவித்து ஃபீல் பண்ணுவது போல் இன்னும் எத்தனை படத்தில் நடிப்பார் என்று தெரியவில்லை. செகண்ட் ஆஃபில் இவரை ஜெர்மனிக்கு கொண்டுவந்து காமெடி பண்ணியிருப்பது திரைக்கதை வறட்சியைக் கொட்டுகிறது. அதிலும் நீளமான அந்த மாடு காமெடி டூ மச்.

பிரகாஷ்ராஜ், விஜயுடன் பழகின பாவத்திற்கு எப்படிப்பட்ட கேரக்டரில் எல்லாம் நடிக்க வேண்டியிருக்கிறது. அற்புதமான நடிகனை வீணடித்து இருக்கிறார்கள். மற்றபடி தேவராஜ், ஆனந்தராஜ், ஸ்ரீமன் எல்லாம் சும்மா டம்மி வில்லன்கள். ரஞ்சிதாவும், மனோஜ் கே.ஜெயனும் தயிர்சாதத்துக்கு ஊறுகாய் மாதிரி.

இதில் விஜய் ரசிகர்களுக்கான காட்சிகள் ஏராளம். இண்ட்ரோ சாங், கல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிக் கொண்டே சண்டை, சுற்றி நிற்கும் கார்கள் வெடித்து சிதறுவது, பிரகாஷ்ராஜை மடக்கும் போது பஞ்ச் டயலாக் காட்சிகளில் ரசிகர்கள் சாமி வந்தது போல் ஆடுகிறார்கள். அறிமுகப் பாட்டில் குஷ்பூ ஸ்கிரீனில் பாதியை நிறைத்துக் கொள்கிறார். நல்லவேளை பாடல் முழுவதும் அவரை ஆட விட‌வில்லை. பாடியிருப்பது அட.. கோவை சரளா!!!

பழிவாங்கும் திட்டத்தில் தான் அவர் நயனை லவ் பண்ணுகிறார் என்று தெரியும் போது திரைக்கதையில் ஷாக். அதே போல் தேவராஜின் பையன் தான் விஜய் என்று தெரியும்போதும் அதே ஷாக். அந்த டெம்போவை மெயின்டெயின் பண்ணாமல் தொடர்ந்து மூன்று பாடல்கள் போட்டு இரண்டாம் பாதியில் எல்லாரையும் கேண்டீன் பக்கம் ஓட விடுகிறார்கள்.

இன்டெர்நேஷனல் டான் என்பதற்கு ஹாலிடே ரிசார்ட் மாதிரி முனீச்சில் போய் ஷுட் பண்ணியிருப்பது, வில்லன்கள் ஹெலிகாப்டரில் வருவது எல்லாம் புரொடியூசர் பணத்தின் தாராளம். ஹெலிகாப்டரில் ஜஸ்ட் லைக் தேட் என‌ சண்டை போடுவது, க்ளைமேக்ஸில் புழுதி மணலில் கண்ணைத் திறந்து மட்டும் ஹீரோயிஸ பில்டப் பண்ணியிருப்பது கொஞ்சம் ஓவர்.

படிக்காதவன், பொல்லாதவன் ஜெராக்ஸ் மாதிரி இருப்பதால் இந்த படம் ஓடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

வில்லு ‍- விஜய் இஸ் பேக் வித் ப்ளோ(போக்கிரி பார்ட் 2).

*************

7 comments:

ஷாஜி said...

வில்லு ‍- விஜய் இஸ் பேக் to flop.

kajan said...

நல்லா எழுதிறிங்க தொடர்ந்து எழுதுங்க

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பதிவுலக நண்பர்களிடமிருந்து முற்றிலும் வித்தியாசமான ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

Raj said...

நான் வர்ல இந்த விளையாட்டுக்கு!

butterfly Surya said...

எச்சரிக்கை:

பார்க்காதவர்கள்: புது வருடத்தின் அதிர்ஷ்டசாலிகள்..

மீறி ரிஸ்க் எடுப்பவர்கள் மிகுந்த தைரியசாலிகள்..

பார்த்தவர்கள்: துரதிருஷ்டசாலிகள்.

rajesh said...

ukanthu yosipangolo??

கணேஷ் said...

வருகை புரிந்து பாராட்டியவர்களுக்கும் திட்டியவர்களுக்கும் நன்றிகள் பல.

Related Posts with Thumbnails