புத்தாண்டில் போலீஸ் ஸ்டேஷன்!

புத்தாண்டு இரவின் உற்சாகத்தை ரசிப்பதற்காக நான் திருவான்மியூரில் இருக்கும் என் நண்பனின் வீட்டுக்கு இரவு 9 மணி வாக்கில் கெளம்பினேன். புத்தாண்டு அன்று நல்ல டீசண்டான டிரஸ் போட்டு கோவிலுக்கு போக வேண்டும் என்பதால ஒரு செட் டிரஸ், சோப், ப்ரஷ் எல்லாம் எடுத்துக் கொண்டு சென்றேன். தமிழகத்தின் தலைநகரில் நான் கொண்டாடும் 3‍-வது நியூ இயர்.

திருவான்மியூரில் உள்ள ஒரு செட்டிநாடு ஹோட்டலில் 10.30 மணிக்குள் சிக்கன் பிரியாணியும் ட்ரை சிக்கன் ஃப்ரையும் சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள பீச்சுக்கு நடையைக் கட்டினோம். பீச் முழுவதும் இளைஞர்கள் கூட்டம். கையில் பீர் பாட்டிலுடன். திருவான்மியூர் R.T.O விலிருந்து பீச் போகும் அந்த ரோட்டில் அசுரத்தனமான வேகத்தில் பைக்கில் பறந்து கொண்டிருந்தனர். இவ்வளவு கூட்டம் பீச்சில் பீர் பாட்டிலோடு சுத்துவதை போலீஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டது மட்டுமில்லாமல் அவர்களுக்கு பாதுகாப்பும் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒரு மருந்துக்கு கூட சுடிதார் பெண்களைக் காணவில்லை. சுடிதார் பெண் ஏன் சேலை கட்டிய பேரிளம்பெண்கள் கூட அந்த கூட்டத்தில் பார்க்க முடியவில்லை. மெரீனாவிலும், பெசன்ட் நகரிலும் குடும்பத்துடன் அவர்கள் போயிருக்கலாம்.

சரி, நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று எதிர்ப்படும் எல்லா 'குடி'மகன்களுக்கும் "ஹேப்பிபிபி நியூயூயூ இயர்" என்று கத்திவிட்டு 12.45 மணிக்கு வீட்டில் வந்து செட்டில் ஆகிவிட்டோம். கொஞ்சம் ரிலாக்ஸாகி டி.வியை ஆன் பண்ணி சன் டிவி பார்த்தால் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அனைவரும் திண்டுக்கல் சாரதி பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். மார்கெட்டிங்கின் உச்சகட்டம். படத்தில் சரக்கு இல்லையென்றால் என்ன தான் மார்கெட்டிங் பண்ணினாலும் ஒண்ணும் தேறாது, மக்கள் ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று புண்ணியவான் யாராவது அவர்களுக்கு சொன்னால் நல்லது.

ஒரு வழியாக ஃப்ரெண்ட்ஸ்க்கெல்லாம் ஃபோனில் விஷ் பண்ணிவிட்டு தூங்குவதற்கு ரெடியானேன். அப்போது 1.15 மணிக்கு என்னுடைய நெருங்கிய தோழி கால் பண்ணியதால் 15 நிமிஷம் பேசினேன். அந்த பொண்ணும் திருவான்மியூரில் தான் இருக்கிறாள். நான் தூங்கும்போது 1.45 இருக்கலாம்.
புத்தாண்டின் அதிகாலை 7 மணி இருக்கலாம் என்று நினைக்கிறான். அதே தோழி, தனது தோழியின் மொபைல் ஃபோனில் இருந்து கால் பண்ணி, மிகவும் படபடப்புடன் "என் ரூமில் வைத்து இருந்த மொபைல் ஃபோன், ஹேண்ட் பேக் எல்லாம் திருடு போய் விட்டது" என்றாள்.

புத்தாண்டின் முதல் செய்தியே அதிர்ச்சியுடன். அந்த ஹேண்ட் பேகில் அவளுடைய 7000 ரூபாய் பணம், டிரைவிங் லைசன்ஸ், ஏ.டி.எம் கார்டு இருந்தது. கொஞ்ச நேரத்தில் நானும் அவர்கள் வீட்டுக்கு சென்று நன்றாக தேடிப் பார்த்தோம். எதுவும் அகப்படவில்லை. நைட் தூங்கும் போது பால்கனியை சரியாக மூடாததால் அது வழியாக யாராவது திருடன் வந்திருப்பான் என்று நினைத்தோம்.

சிறிது நேர முயற்சிக்கு பின், போலீஸ் ஸ்டேஷன் போய் கம்ப்ளையிண்ட் கொடுக்கலாம் என்று முடிவு பண்ணினோம். போலீஸிடம் கம்ப்ளையிண்ட் கொடுத்தால் மட்டும் உடனே கண்டுபிடித்து கொடுத்து விடுவார்கள் என்று நம்பிக்கை துளியும் இல்லை. இருந்தாலும் வேறு யாரும் லைசன்ஸ், ஏ.டி.எம். கார்டு எதையும் மிஸ் யூஸ் பண்ணக் கூடாது என்ற ஒரு காரணத்திற்காக ஸ்டேஷன் செல்ல முடிவு செய்தோம்.

என் வாழ்நாளில் இதுவரை போலீஸ் ஸ்டேஷன் சென்றது ஒரே ஒரு முறை மட்டும். ப்ளஸ் டூ மார்க் ஷீட் தொலைந்து போனதால் புதியது வாங்குவதற்கு போலீஸ் ரிப்போர்ட் வேண்டும் என்று சொன்னதால். வெகுஜன மக்களை கொஞ்சம் கூட மதிக்காத Attitude அரசுத் துறையில் வேலை பார்க்கும் எல்லாருக்கும் இருக்கும் என்றாலும் போலீஸ் ஸ்டேஷனில் ரொம்ப அதிகம் என்று நான் நினைக்கிறேன். டாஸ்மாக்கில் நுழைந்தது போன்று குப்பென்று மூச்சில் அடிக்கும் வாடை எப்போதும் எல்லா ஸ்டேஷனில் இருக்கும். இரண்டாவது, என்னுடைய பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன். நான் அப்போது காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன். இதுக்காக ஊருக்குக் கெளம்பலாம் என்று நான் இருக்கும் போது என் அப்பா போன் பண்ணி "200 ரூபாய் கொடுத்தால் போதும் நீ வரத் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்கள்" என்றார். வாழ்க போலீஸ் ஜனநாயகம்!! வாழ்க லஞ்சம்!! என்று நினைத்துக் கொண்டேன்.

இது மூன்றாவது முறை. மருந்தீஸ்வரர் கோவிலுக்கு பின்னால் இருக்கும் J-6 போலீஸ் ஸ்டேஷனுக்கு நாங்கள் இருவரும் சென்றோம். இந்த முறை எல்லாரும் கொஞ்சம் டீசன்டாகவே பேசினார்கள். "இதெல்லாம் கேர்லெஸ். கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம். எப்பவாவது இந்த ஏரியாவில் திருடன் எவனாவது மாட்டினால் விசாரிக்கிறோம்" என்று ஸ்ட்ரெய்ட்டாவே சொல்லிவிட்டார். சும்மா பேருக்கு கம்ப்ளெயிண்ட் மட்டும் எழுதிக் கொடுத்து வந்து விட்டோம்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், போலீஸ்காரர்களுக்கு அப்படி என்ன வேலை இருக்கிறது? அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, முக்கியமான தினங்களில் பொது மக்கள் கூடும் இடங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் பாதுகாப்பு அளிப்பது, கொலை, கற்பழிப்பு, கடத்தல் போன்ற ஹை டிகிரி க்ரைம்களை இன்வெஸ்டிகேட் பண்ணுவது, இரவு ரோந்து, சிட்டியில் ரொம்ப குப்பையால் நாற்றம் அடித்தால் குப்பை அள்ளுவது (எப்போவாவது)போன்ற வேலைகள் தான். அதே சமயம் சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருப்பவருடைய டூ வீலர் தொலைந்தால், வீட்டில் கொள்ளையடித்து போய்விட்டால் அதை போலீஸிடம் கம்ளையிண்ட் பண்ணினால் அவர்கள் அதை எவ்வள‌வு சீரியஸாக விசாரிப்பார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி!

தோழியை ஆறுதல்படுத்திக் கொண்டு, அன்று நாள் முழுவதும் புத்தாண்டிற்கான வழக்கமான உற்சாகம் எங்கள் இருவரிடமும் இழந்து இருந்தது. போலீஸ் ஸ்டேஷனுக்கு புத்தாண்டு அதுவுமாக போனது பற்றி செண்டிமென்டாக ஃபீல் பண்ணவில்லை என்றாலும், புதிய ஆண்டின் முதல் தினமே பணம் மற்றும் ஃபோனை இழந்து நின்றது கவலையை அளித்தது.

*****************************

14 comments:

துளசி கோபால் said...

அங்கே மட்டும் இல்லைங்க, இங்கேயும் சாதாரண திருட்டுக்கெல்லாம் போலீஸ் மெனெக்கெடமாட்டாங்க. நாமே பேங்குக்குப் போன் செஞ்சு கார்டு சமாச்சாரங்களைக் கேன்ஸல் செய்யச் சொல்லிறனும்.

போலீஸ் கேக்கும் முதல் கேள்வியே நமக்கு இன்ஷூரன்ஸ் இருக்கான்னுதான். இருக்குன்னா களவு போன சாமான்கள் லிஸ்ட் ஒன்னு எழுதிக் கொடுக்கணும். அவ்ளோதான்.

உயிருக்கு ஆபத்து, கொலை, காயம் இப்படின்னாதான் போலீஸ் உடனே ஓடி வரும். பாடிலி ஹார்ம் இல்லைன்னா எல்லா சாவதானம்தான்.

கவலைப்படாதீங்க.
இந்த வருசம் நல்லாவே நடக்கும்.
அதான் காவல்தெய்வங்களைப் பார்த்தீங்களே:-))))

புத்தாண்டுக்கான வாழ்த்து(க்)கள் உங்களுக்கும் தோழிக்கும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஒரு மருந்துக்கு கூட சுடிதார் பெண்களைக் காணவில்லை. சுடிதார் பெண் ஏன் சேலை கட்டிய பேரிளம்பெண்கள் கூட அந்த கூட்டத்தில் பார்க்க முடியவில்லை.//


உண்மையாக? நிச்சயமாக?

கணேஷ் said...

துளசிகோபால்,

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நாங்கள் உடனே சம்பந்தப்பட்ட பேங்க்கிற்கு ஃபோன் பண்ணி கார்டை உடனே block பண்ணி விட்டோம்.

உங்கள் வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் நன்றி.

கணேஷ் said...

SUREஷ்,

//உண்மையாக? நிச்சயமாக?

உண்மையாகவும் நிச்சயமாகவும் தான் சார். அதில் எந்தவித சந்தேகமில்லை.
கேட்கும் தொனியைப் பார்த்தால் நீங்களும் திருவான்மியூர் பீச்சில் தான் இருந்தீர்களா??

sindhusubash said...

உங்க பதிவை படிச்சுட்டு ரொம்பவே ஷாக்காகிட்டேன்,ஏன்னா இதே மாதிரி சம்பவத்தை இன்னிக்கு விடிகாலையில் கனவு கண்டு பயந்து வீடு முழுவதும் எல்லாம் சரியா இருக்கானு பார்த்துட்டேன்.புது வருஷம் நல்லதாக இருக்க பிரார்த்திப்போம்.

sindhusubash said...

உங்க பதிவை படிச்சுட்டு ரொம்பவே ஷாக்காகிட்டேன்,ஏன்னா இதே மாதிரி சம்பவத்தை இன்னிக்கு விடிகாலையில் கனவு கண்டு பயந்து வீடு முழுவதும் எல்லாம் சரியா இருக்கானு பார்த்துட்டேன்.புது வருஷம் நல்லதாக இருக்க பிரார்த்திப்போம்.

Raj said...

//கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், போலீஸ்காரர்களுக்கு அப்படி என்ன வேலை இருக்கிறது?//

அப்படி இல்லை...இங்கே கோபாலபுரம் வந்து பாருங்கள்...எத்தனை போலிஸ்காரர்கள் முதல்வர் பாதுகாப்புக்காக ரோட்டில் கால் கடுக்க நின்றுகொண்டிருக்கிறார்கள் என்று ( பெண் போலிஸ்கள் காலை நான் ஆபிஸுக்குள் நுழைந்து மாலை வெளியே வரும் வரை ரோட்டில் நின்று கொண்டிருப்பதை பார்த்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கும்)...இன்னொரு தகவல்..என் சக ஊழியர் ஒருவருடைய மொபைல் ஒரு மாதத்திற்கு முன் தொலைந்து விட்டது..காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்..நேற்று காவல் நிலையத்திலிருந்து கூப்பிட்டு அந்த போனை கண்டு பிடித்து கொடுத்து இருந்தார்கள்.....அவர்கள் கஷ்டம் அவர்களுக்கு.....எல்லா பணியிலும் நிச்சயம் ஏதோ ஒரு பணிச்சுமை இருக்கத்தான் செய்கிறது....அவர்கள் நிலையில் உங்களை இருத்தி பாருங்கள்...அதற்காக நான் அவர்களுக்கு ஆதரவாக பேசுவதாக நினைக்க வேண்டாம்

கணேஷ் said...

//புது வருஷம் நல்லதாக இருக்க பிரார்த்திப்போம்.

புது வருடம் நல்லதாக அமைய பிரார்த்திப்போம்.
வருகைக்கு நன்றி sindusubash!

கணேஷ் said...

//எல்லா பணியிலும் நிச்சயம் ஏதோ ஒரு பணிச்சுமை இருக்கத்தான் செய்கிறது....அவர்கள் நிலையில் உங்களை இருத்தி பாருங்கள்...அதற்காக நான் அவர்களுக்கு ஆதரவாக பேசுவதாக நினைக்க வேண்டாம்

நான் உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்கிறேன் Raj!

நான் வருத்தப்படுவது என்னவென்றால் சாமான்ய மக்களின் தகுதிக்கு மீறிய இழப்பு, அது போலீஸ்காரர்களின் பார்வையில் சாதாரண விஷயமாகப் படும்போது, அவன் யாரிடம் சென்று முறையிடுவான் என்பது மட்டுமே!

வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி Raj!

Anonymous said...

//நான் வருத்தப்படுவது என்னவென்றால் சாமான்ய மக்களின் தகுதிக்கு மீறிய இழப்பு, அது போலீஸ்காரர்களின் பார்வையில் சாதாரண விஷயமாகப் படும்போது, அவன் யாரிடம் சென்று முறையிடுவான் என்பது மட்டுமே!
//

இதெல்லாம் ஓவர்! Handbag தொலஞ்சு போனதுக்கெல்லாம் எந்த ஊரிலும்(நாட்டிலும்) ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீமெல்லம் வச்சு தேட மாட்டாங்க.

RAMASUBRAMANIA SHARMA said...

finally what happened...!!! did you and your friend traced the missed celphones and money...definetely...that particular area station must be having details about this theft and if they think, they will definetely get it for you...as usual...something is required...this has been shown in lots of films...but still no remedy for this something...as DIRECTOR SHANKAR...PICTURISED IN THE MOVIE"INDIAN"....OUR NATIONAL INTEGRETITY CAN BE SEEN ONLY IN THIS PARTICULAR SOMETHING....I AM NOT BLAMING THE ENTIRE NETWORK...BUT THESE TYPE OF SMALL THEFTS HANDLED BY PEOPLE...WHO DOSENT BOTHER ABOUT ANYTHING...AND ASK VERY CASUALLY...EVERY THING CAN BE OBTAINED, IF WE COOPRATE WITH THEM FOR SMALL THEFTS...FOR LARGER SCANDELS....WE ATLEAST HAVE A FRIEND..WHO HAS ACCESS IN EITHER POLITICS OR PRSS...THEN IT WILL BE SOLVED AMICABLELY...THIS IS PURELY MY OPINION, BASED ON MY EXPERIENCES...NOT BLAMING ANY BODY IN THE DEPT....

கணேஷ் said...

//இதெல்லாம் ஓவர்! Handbag தொலஞ்சு போனதுக்கெல்லாம் எந்த ஊரிலும்(நாட்டிலும்) ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் டீமெல்லம் வச்சு தேட மாட்டாங்க

கரெக்ட் அனானி. நான் தான் கொஞ்சம் ஓவரா சலம்புறேன். உங்க ஐ.டி யோட வந்து திட்டியிருக்கலாம்ல பாஸ்!

பட்டாம்பூச்சி said...

புத்தாண்டு இனிமையாய் அமையும்.கவலை வேண்டாம்.
உங்கள் தோழிக்கும் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்:-).

கணேஷ் said...

//புத்தாண்டு இனிமையாய் அமையும்.கவலை வேண்டாம்.
உங்கள் தோழிக்கும் உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்:-).

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பட்டாம்பூச்சி!

Related Posts with Thumbnails