காலண்டரில் தாதா, Children of Heaven, ஒரு புக்

நேற்று இரவு 11 மணிக்கு NDTV 24X7 TVயில் ஹாட் நியூஸ். முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியின் ஃபோட்டோ மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் 2009 வருட காலண்டரில் அச்சிடப்பட்டுள்ளது. அதை கங்குலி மூத்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டி தலைவர்களுடன் சேர்ந்து கொடுத்த ப்ரஸ் கான்ஃபரன்ஸில் இந்த கூத்து நடந்துள்ளது. கம்யூனிஸ்ட் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கும் மேற்கு வங்கத்தில் இருந்த வந்த உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களில் கங்குலியும் ஒருவர் என்ற காரணத்திற்காக அக்கட்சி இவ்வாறு செய்து கௌரவப்படுத்தி இருக்கலாம்.

ஆனால் இதை அவர் கிரிக்கெட் ஒழுங்காக விளையாடிக் கொண்டிருக்கும் போதோ இல்லை இவர் கேப்டனாக பொறுப்பேற்று தொடர்ச்சியாக பல வெற்றிகளைக் குவித்த போதோ செய்து இருக்கலாம். ஆனால் அவரே பாவம் போல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நொந்து நூடூல்ஸாகி பின் போனா போகுது என்று ரஞ்சி தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர்கள் செய்வதன் நோக்கம் என்ன? ஓ.கே. இதை ஒரு சாதாரணமான விஷயமாக எடுத்துக் கொண்டு பத்தோடு பதினொன்றாவது நியூஸாக காட்டியிருக்கலாம். ஆனால் ஒரு அரை மணிநேரம் தனி கவரேஜாக காட்டியுள்ளது NDTV 24X7 TV. இந்த கொடுமைக்கெல்லாம் ஒரு படி மேலே போய் அவர்கள் பண்ண காமெடி, அந்த செய்தி தொகுப்புக்கு வைத்த பெயர் "Does Dada making political debut?" இதன் உள்நோக்கம் என்னவாக இருக்கும். ஒருவேளை அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதாலா அல்லது ஓய்வு பெற்ற கங்குலியை கட்சியில் இழுத்துப் போட்டு பேரும் புகழும் சேர்க்கலாம் என்பதாலா? நான் அரசியலில் கொஞ்சம் வீக். ஆனால் நான் தூங்கப் போகும் முன் நன்றாக விழுந்து விழுந்து சிரித்தேன். (அதனால கொஞ்சம் காயம் ஆயிடுச்சி :(

இதுவரை Hindu வில் கங்குலியை பற்றி Former Indian captain என்று prefix சேர்த்து போடுவார்கள். ஆனால் இரண்டு நாளைக்கு முந்தைய Hindu வில் Former Indian Cricketer என்று prefix போட்டு அவர் பேட்டியை வெளியிட்டார்கள். அது உண்மை தான் என்றாலும் எனக்கு வித்தியாசமாகப் பட்டது. எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்று கங்குலி நிச்சயம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சொல்லிக் கொண்டிருப்பார்.

இதுக்கு சம்பந்தமில்லாத ஒரே ஒரு கேள்வி: கங்குலி இந்த ஜென்மத்தில் க்ரேக் செப்பலை மறந்து விடுவாரா?

*********************************

இன்று மதியம் விஜய் டி.வியில் Children of Heaven படம் ஒளிபரப்பினார்கள். நான் ஏற்கெனவே இந்த படத்தை நிறைய தடவை பார்த்துவிட்டேன். இதன் ஒரிஜினல் டி.வி.டியும் என்னிடம் உள்ளது. ஆனால் இந்த படத்தை விஜய் டிவி ஒளிபரப்பும்போது மறுபடியும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ஆசை. சொர்க்கத்தின் குழந்தைகள். ஒரு அழகான குட்டி கவிதையை டைட்டிலாக வைத்து உள்ளனர். படம் அழகான செல்லுலாயிட் கவிதை.

ரெண்டே ரெண்டு சின்ன பசங்களை வைத்து அருமையாக பின்னப்பட்ட கதை. எப்படியாவது அந்த பையனுக்கு ஷூ கிடைத்துவிட வேண்டும் என பார்க்கும் அனைவரையும் கலவரப்பட வைக்கிறார்கள். அந்த சிறுமி சான்ஸே இல்லை. குடு குடு என்று ஓடி வந்து அண்ணனுக்கு ஷூ கொடுக்கும்போது ஆகட்டும், ப்ரேயரில் எல்லோருடைய கால்களையும் பார்த்து ஷூக்காக ஏக்கப்படும் போதாகட்டும் அட்டகாசமான நடிப்பு. க்ளைமேக்ஸில் நடக்கும் ஓட்டபந்தயத்தில் third place கிடைத்தால் தான் ஷூ என்று முன்னாலே ஒடும் சிறுவன் மெதுவாக ஓடும் போதாகட்டும், ஒரு வழியாக டார்கெட் ரீச் பண்ணவுடன் மயங்கி விழுந்து எழுந்து டீச்சரிடம் நான் third place வந்துட்டனா சார் என்று கேட்கும்போது ஆகட்டும் நடிப்பில் பின்னி பெடல் எடுத்து உள்ளான். (ஆனால் அநியாயத்துக்கு விளம்பரம் போட்டு மண்டை காய வைத்து விட்டார்கள்)

சின்ன வயதில் நானும் என் தம்பியும் வீட்டிற்கு தெரியாமல் பம்பரத்திற்காக இப்படி அலைந்தது தேவையே இல்லாமல் நியாபகம் வந்து போனது.

*******************************

Can you correlate these terms such as Principle of Favorability, Omens, Urim and Thummim, Crstal shop, Egypt, Dreams of treasure with any book?

நான் இப்போது வெறித்தனமாக படித்துக் கொண்டிருக்கும் ஒரு புக் பற்றிய Hint தான் மேலே கொடுத்தது.. சும்மா டைம்பாஸ்க்காக படிக்க ஆரம்பித்தேன். ஆனால் படிக்க படிக்க ஒரு சுவாரஸ்யம் இந்த புத்தகத்தில். 170 பக்கம் உள்ள இந்த புத்தகத்தில் நேற்று மட்டும் 70 பக்கம் படித்து முடித்து விட்டேன். முழு புத்தகத்தையும் படித்து முடித்து விட்டு முடிந்தால் அதைப் பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன்.

********************************

8 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//Former Indian Cricketer என்று prefix போட்டு//



???????????????

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்லா எழுதறீங்க பாஸ்

ஆளவந்தான் said...

//
இன்று மதியம் விஜய் டி.வியில் Children of Heaven படம் ஒளிபரப்பினார்கள். நான் ஏற்கெனவே இந்த படத்தை நிறைய தடவை பார்த்துவிட்டேன்.
//

பார்க்கவேண்டிய லிஸ்ட்-ல இருக்கு.. இன்னும் பார்க்கல..

கணேஷ் said...

@SUREஷ்..

//??????????????? //

இதுக்கு என்னங்க அர்த்தம் SUREஷ்.. உங்களுக்கு அதில் என்ன புரியவில்லை என்று நான் தெரிந்து கொள்ளலாமா?

//நல்லா எழுதறீங்க பாஸ்//

பாஸ், நீங்க என்னை ரொம்ப புகழ்றீங்க.. நான் எந்த பதிவு போட்டாலும் சளைக்காமல் கமெண்ட் போடும் உங்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து ஆதரவு கொடுக்கவும்.

கணேஷ் said...

@ஆளவந்தான்,

//பார்க்கவேண்டிய லிஸ்ட்-ல இருக்கு.. இன்னும் பார்க்கல//

கண்டிப்பா பாருங்க.. பார்க்க வேண்டிய படம்.

RAMASUBRAMANIA SHARMA said...

NALLA PATHIVU..."KANGULI"...IPPO ROMMBA ALTIKIRATHU ILLAI, SO LET US NOT WORRY ABOUT THE POLITICAL PART...WHO KNOWS...ABOUT THE FILM ARTICLE...IS REALLY SUPER...MUST SEE FILM...

ஆளவந்தான் said...

//கண்டிப்பா பாருங்க.. பார்க்க வேண்டிய படம்.
//
நேத்து தான் பாத்தேன்.. விமர்சன பதிவு இங்கே

கணேஷ் said...

//நேத்து தான் பாத்தேன்.. விமர்சன பதிவு இங்//

நானும் படித்தேன். சிறப்பான முறையில் விமர்சித்து உள்ளீர்கள் ஆளவந்தான்!

Related Posts with Thumbnails